மகிமைகள் கொண்ட ஸ்ரீசக்ர மஹாமேரு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகிமைகள் கொண்ட ஸ்ரீசக்ர மஹாமேரு பற்றிய பதிவுகள் :

ஸ்ரீமாதா லலிதா தேவிக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை. சிவனும் சக்தியும் சேர்ந்து இருப்பது என்றால் அது மஹா மேரூவில் தான்.

யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயர்ந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி.
பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் ஸீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது சக்ரம் எனப்படும் ஸ்ரீசக்ரபூர்ணமகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரம்மன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்.; இந்திரன் இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம்.

அதுபோல அன்னை ஜகன் மாதாஅம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீபுரம் எனக்கூறப்படும் ஸ்ரீசக்ரம் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீசக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு என கூறப்படும்.

அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பதுபோல் தேவியின் ஸ்ரீசக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர். ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

1. முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்கிய மோகன சக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

2. தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகினி முதலான 16 தேவியர் காவல் புரிகின்றனர்.

3. தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வஸம்க்ஷோபன சக்ரம் என்ற பெயர். இதனை குப்தரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

4. 14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸௌபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

5. 10 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

6. 10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரக்ஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகின்றனர்.

7. முக்கோணங்களைக் கொண்ட ஸர்வரோககர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

8. ஒரே முக்கோணம் ஸர்வஸித்தப் பிரதாயக சக்கரம்என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.

9. பிந்துஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீலலிதா மகாத்ரிபுரசுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ரிபுரசுந்தரியாக இருந்த கொண்டு அருள் பாலிக்கின்றாள்.
அன்னை ஸ்ரீ லலிதா தேவியை வணங்கி சகல நன்மையை அடையலாம்.

தெய்வத்திற்கு தெய்வமாக இருப்பவள் ஸ்ரீ மாதா லலிதா தேவி. கலியுக கண் கண்ட தெய்வமாக இருப்பவள், வரத்தை அள்ளி தருபவள் ஜகன் மாதா லலிதா தேவி. அவளையே கதி என்று இருந்தாள் வாழ்வில் துன்பம் துயரம் நம்மை அண்டாது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top