ஐப்பசி பானை வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐப்பசி பானை வழிபாடு பற்றிய பதிவுகள் :

இந்த வழிபாடு பெரும்பாலும் கிராமப்புறங்களில் நடப்பதைக் காணலாம். அதுவும் குறிப்பாக திருச்சி, கரூர், நாமக்கல் பகுதிகளில் அதிகமாக காணலாம்.

இந்த விரதத்தின் நோக்கம் :

காலபுருஷ தத்துவத்தின்படி ஐந்தாம் பாவகம் சிம்மம். சூரியனே குழந்தையை தரக்கூடியவர், இவ்வாறு வாழையடி வாழையாக வம்சத்தை தரக்கூடிய சூரியன் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் நீசம் ஆவார். சூரியன் தனது நீச ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு செல்வதற்குள் இந்த விரதம் இருக்க பட வேண்டும். ஐப்பசி மாதத்தில் இந்த ஐப்பசி பானை என்கிற விரதம் இருப்பதால், உங்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுள் உடைய குழந்தை பிறக்கும்.

யாரெல்லாம் இந்த விரதம் இருக்கலாம் :

நீங்கள் நினைப்பது போல எல்லோருமே இந்த விரதத்தை இருக்க முடியாது. புதுமண தம்பதியினர்கள் மட்டுமே இந்த விரதத்தை மேற்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு தம்பதியினருக்கு கார்த்திகை மாதம் முதல் அடுத்து வரக்கூடிய ஐப்பசி வளர்பிறை வருவதற்குள் புதுமண தம்பதியினர்கள் மட்டுமே விரதம் இருக்க முடியும்.

திருமணமாகி இந்த இடைப்பட்ட காலத்தில் குழந்தை பெறும் பாக்கியம் இருக்குமேயானால் அதாவது பெண்கள் மாசமாக இருக்கும் பட்சத்தில் இந்த விரதம் இருக்கக்கூடாது.

ஒருவருக்கு கார்த்திகை மாதம் திருமணம் ஆகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஐப்பசி வருவதற்குள் குழந்தையுடன் மாசமாக இருந்தால் இந்த ஐப்பசி பானை விரதம் தேவையில்லை. மற்றவர்களுக்கு இது கட்டாயமாகும். அதேபோல ஒருவர் ஆவணி மாதத்தில் திருமணம் செய்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், ஓரிரு மாதத்தில் வரும் ஐப்பசி மாதத்தில் இந்த விரதம் மேற்கொள்ள வேண்டும்.

விரதம் இருக்கும் முறை :

இந்த விரதம் ஐப்பசி மாதத்தில் வளர்பிறை திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மட்டுமே இருக்க வேண்டும். திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக இருந்தால் அதற்கு ஓரிரு நாட்கள் முந்தைய நாளின் பெண் வீட்டிலிருந்து, காசி பானை என்று சொல்லக்கூடிய பித்தளை பானை அல்லது மண் பானை ஒன்றில் அந்தப் பானைக்கு பொங்கல் வைக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பாசிப்பயிறு போன்றவை வைத்து, மணமகன் வீட்டிற்கு வருவார். அவர்களுக்கு மணமக்கள் சார்பாக விருந்து தடபுடலாக வைக்கப்பட வேண்டும். 

இவையெல்லாம் ஓரிரு நாட்கள் முன்பாக நடப்பவை, ஐப்பசி பானை தினத்தன்று அதாவது திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை அன்று காலை உணவருந்தி மதிய ஒருவேளை உபவாசம் இருந்து மாலை நேரத்தில், கொண்டுவரப்பட்ட பொருட்களால் பொங்கல் வைத்து மணமக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் குல தெய்வத்தையும் முன்னோர்களையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். 

ஏனெனில் சூரியனை நீசமாக இருக்கும் பொழுதே அவர் ஐந்தாம் பாவம் அதிபதியாக குலதெய்வமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் அந்த நேரத்தில் இல்லாமல் போகும். அந்த நேரத்தில் இந்த விரதத்தை மேற்கொள்வதால் நிச்சயம் வாரிசு ஏற்படும் என்பது உண்மை. திருமணமான பிறகு செய்யக்கூடிய சடங்குகளில் இதுவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top