சகல செல்வம் அருளும் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகல செல்வம் அருளும் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகள் பற்றிய பதிவுகள் :

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது, ஸ்ரீசக்ர வழிபாடு. ஆதிசங்கரர், உக்கிரமாக இருந்த அம்பிகைகளின் மூல ஸ்வரூபங்களுக்கு முன்பு, ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து, அம்பிகையின் உக்கிரத்தை குறைத்து, சாந்த ஸ்வரூபமாக அம்பிகையாக மாற்றியிருக்கிறார். ஸ்ரீசக்ரம் இருக்கும் இடங்களில், லஷ்மி குடியிருப்பாள் என்பது ஐதீகம். இந்த ஸ்ரீசக்ர வழிபாடு, சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்ரம். லிங்கபுராணத்தில், புஷ்ப தந்தர் என்பவர், மேருமலையில் இந்த ஸ்ரீசக்ர வழிபாட்டை, வரை கலையாக வரைந்து, அதற்கு பிள்ளையார் வடிவம் கொடுத்ததாகவும்; ஆதிசங்கரரின் குரு கெளடபாதர்தான் அதை உணர்ந்து, அவருக்கு உபதேசித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் எப்போதும் மன அமைதி, ஆரோக்யம், நிரந்தர வருமானம், சக்தி போன்றவை நிறைந்திருக்க, வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாட்டையும் போக்கும் வல்லமை இந்த வழிபாட்டுக்கு உண்டு.  

சரஸ்வதியும், லஷ்மியும் இருபுறமும் நின்று, ஸ்ரீ லலிதாம்பிக்கைக்கு சாமரம் வீசும் பணி செய்கிறார்கள். திதி நித்யாக்களும், நவகிரகங்களும், நட்சத்திரங்களும், ராசிகளும் இவளை வலம்வருவதால், அனைத்து தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்த பலனை அடையலாம். 

செளந்தர்ய லஹரியில், ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் வழிபாடு செய்பவர்கள், பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுகிறார். பூஜையறையில், ஸ்ரீசக்ரம் அருகில் தெய்வங்களைத் தவிர, முன்னோர்கள் படங்கள், பிரசாதங்கள் எதுவும் வைக்காமல் சுத்தமாக இருக்கவேண்டும்.  

நல்ல நாளில் முழுமுதற்கடவுளை வணங்கி, ஸ்ரீசக்ர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளிலும், விசேஷ நாட்களிலும், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும், பெளர்ணமி, அமாவாசை (முன்னோர் வழிபாடு செய்த பிறகு) நாட்களில் வழிபட வேண்டும். சக்தி கொடுக்கும் ஸ்ரீசக்ர வழிபாடு செய்வது சகல சித்தியைக் கொடுக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top