நமது ஓம் நமசிவாய ஆன்மீக அபிஷேகமும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

1. பால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் சுகத்தைக் கொடுக்கும்.

3. பஞ்சகவ்யம் அபிஷேகம் செய்தால் மனதைப் பரிசுத்தம் செய்யும் அதனால் தீய எண்ணங்கள் வராது.

4. பஞ்சாமிருதம் அபிஷேகம் செய்தால் வெற்றி கிடைக்கும்.

5. நெய் அபிஷேகம் செய்தால் மோட்சத்தைத் தரும்.

6. தயிர் அபிஷேகம் செய்தால் மகப்பேறு தரும்.

7. கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் ஆரோக்யத்தைத் தரும், நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயும் விலகும்.

8. தேன் அபிஷேகம் செய்தால் கலைவாணியின் அருளைப் பெற்றுத்தரும்.

9. பழரசம் அபிஷேகம் செய்தால் எம பயத்தை நீக்கும்.

10. இளநீர் அபிஷேகம் செய்தால் உயர்ந்த பதவியைத் தரும்.

11. சந்தனம் அபிஷேகம் செய்தால் இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்யும்.

12. கலசாபிஷேகம் செய்தால் அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தரும்.

13. வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தால் வறுமை நீங்கும்.

Post a Comment

Previous Post Next Post