மார்கழி மாத பிரச்சினைகளும், பெருமாள் வழிபாடும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாத பிரச்சினைகளும், பெருமாள் வழிபாடும் பற்றிய பதிவுகள் :

மாதங்களில் சிறந்த மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் தான் நோய்களும் அதிகரித்து காணப்படுகின்றன. மார்கழி மாத துவக்கத்தை முன்பனிக்காலம் என்று கூறப்படுகிறது. இந்த முன்பனிக் காலத்தில் உடலின் உஷ்ண நிலை தடுமாற்றம் அடைகிறது. இதனால் காது, மூக்கு, தொண்டையில் பிரச்சனைகளும், தலைவலி, தோல் நோய்களும் உண்டாகின்றன.

ஆன்மீக ரீதியாக மார்கழி மாதத்தில் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். மார்கழியில் பிரபஞ்சத்தில் பலவிதமான மாற்றங்கள் நிகழும் என்பதால் இந்த மாதத்தை முழுமையாக இறை வழிபாட்டிற்கு அர்ப்பணித்து விடுகிறார்கள். மார்கழி மாதத்தில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும்.

மார்கழி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டு வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அதிகாலையில் நீராடி வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு, பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி தீர்த்தம் வைத்து, துளசி மாலை சாற்றி அதனுடன் 108 ஏலக்காய்களை வரிசையாக மாலை போல கோர்த்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் மாலை சாற்றி பெருமாள் ஸ்தோத்திரங்களை உச்சரித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எத்தகைய வறுமையும் நீங்கி, பதினாறு செல்வங்கள் உடன் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த மார்கழி மாதத்தில் 50 சதவீதம் அளவிற்கு குழந்தைகளும், 30 சதவீதம் அளவிற்கு பெரியவர்களும் சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். உணவு முறை மாற்றம் ஒன்றே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். அடிக்கடி இஞ்சி சாறு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

குறிப்பாக பெரியவர்களுக்கு தும்மல், மூக்கில் நீர்வடிதல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, போன்ற பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன. இந்த பனிக்காலத்தில் நீங்கள் உரிய பாதுகாப்புடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பனிக்காலத்தில் அடிக்கடி நோய்வாய்ப் படுபவர்கள் கட்டாயம் பச்சை தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும், சுடு தண்ணீரை பருகி வாருங்கள்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சுடு தண்ணீரில் புதினா இலைகள் நான்கு, கொஞ்சம் இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து குடித்து பாருங்கள் இதமாக இருக்கும் மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். மார்கழியில் எளிதாக கிருமித் தொற்று ஏற்பட்டு இதனால் தோல் நோய்கள் அதிகரிக்கவும் செய்யும். எனவே இந்த பனி காலத்தில் சற்று எச்சரிக்கை அவசியம் தேவை.

எந்த காரணம் கொண்டும் நீங்கள் குளிக்காமல் இருக்கக்கூடாது. பனிக்காலம் தானே என்று குளிக்காமல் இருந்தால் பல்வேறு தோல் நோய்களுக்கு நீங்கள் ஆளாக நேரலாம் எனவே தினமும் காலையில் எழுந்து குளித்து விடுவது நல்லது. பனிக்காலத்தில் இயல்பாக குளிர்ச்சி அதிகம் இருப்பதால் மூட்டு போன்ற இடங்களில் இறுகும் தன்மை அதிகரிக்கும். இதனால் மூட்டுவலி, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

உதடு வெடிப்பு, பாத வெடிப்பு போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கத் துவங்கும். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு அருந்தலாம் என்று கூறுவார்கள். எனவே இந்த மார்கழி மாதம் முழுவதும் மிளகிற்கு முக்கியத்துவம் கொடுத்து சமைத்து சாப்பிடுங்கள். மேலும் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து மிளகு தானம், வெண் பொங்கல் தானம் செய்து வறுமையையும் போக்கிக் கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top