பயம் நீக்கும் நவதுர்க்கை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பயம் நீக்கும் நவதுர்க்கை பற்றிய பதிவுகள் :

துர்காதேவி ஒன்பது வகைகளில் தெய்வங்களுக்கும், பக்தர்களுக்கும் உதவியிருக்கிறாள். அந்த ஒன்பது வடிவங்களையே நவதுர்கை என அழைக்கிறோம்.

அவை :

1. வன துர்க்கை

பிறவிப் பெருங்காட்டை அழிப்பவள்.

2. சூலினி துர்க்கை

திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்.

3. ஜாதவேதோ துர்க்கை

முருகன் உதித்தபோது அக்னிக்கும் வாயுவுக்கும் அருளியவள்.

4. ஜுவாலா துர்க்கை

பண்டாசுரனை வதம் புரிய அனல் பிழம்பாகி அரண் அமைத்தவள்.

5. சாந்தி துர்க்கை

தட்ச யாகத்தின் போது கோபமடைந்த சிவனை சாந்தப்படுத்தியவள்.

6. சபரி துர்க்கை

அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன்  வேட்டுவச்சி வடிவில் சென்றவள்.

7. தீப துர்க்கை

பக்தர்களுக்கு ஒளியாய் நின்று உதவுபவள்.

8. ஆசுரி துர்க்கை

அமுதம் கிடைக்க திருமாலுக்கு உதவியவள்.

9. லவண துர்க்கை

லவணன் என்ற அசுரனை சத்ருக்கனன் வென்று வர  உதவியவள்.

இன்றும், நமக்கு பாதுகாப்பாக நின்று அருளுகிறாள். எனவே, இவளை ஒன்பது வடிவங்களாகக் கருதி,

ஓம் வனதுர்க்கையே நம;
ஓம் சூலினி துர்க்கையே நம;

என்று ஒன்பது துர்க்கைகளுக்குரிய மந்திரத்தையும், நாளொன்றுக்கு ஒரு துர்க்கைக்குரிய மந்திரம் வீதம் 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் காரணமற்ற பயம் நீங்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top