குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குரு பகவான் பற்றிய பதிவுகள் :

ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு. அறிவாளிகளை உருவாக்குபவர் இவர் தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவரும் இவரே. இவர் ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம்.

குருவின் பார்வை எதையும் பூரணமாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் அழித்து நல்லருள் புரியும். குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களை குருவின் பார்வை செய்கிறது.

குரு பகவானின் அருள் கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம்.

குருவிற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

குருபெயர்ச்சி :

நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம் கிடைக்கும்.

குரு பகவான் 2-ம் இடத்தில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்.

குரு பகவான் 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.

குரு பகவான் 4-ம் இடத்தில் இருந்தால் வீடு வாகன யோகம் கிடைக்கும்.

குரு பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்தால் பிரச்சனையில்லாத வாழ்வு மலரும்.

குரு பகவான் 7-ம் இடத்தில் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

குரு பகவான் 8-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

குரு பகவான் 9-ம் இடத்தில் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.

குரு பகவான் 10-ம் இடத்தில் இருந்தால் பதவி மாற்றம் கிடைக்கும்.

குரு பகவான் 11-ம் இடத்தில் இருந்தால் செல்வ நிலையில் உயர்வு உண்டு.

குரு பகவான் 12-ம் இடத்தில் இருந்தால் சுபவிரயம், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top