ஜோதிடத்தில் சித்த என்பது நிறைவானது என்னும் பொருள் அமைந்தது. மங்கலமானது எனச் ஜோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் கேது. இந்த சித்த யோகம் என்பதை எப்படி கூறுகிறோம் என்றால் ஒரு நாளில் குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வந்தால் அது சித்த யோகம் என்று அழைக்கப்படுகிறது.
சித்த யோகம் என்றால் வெற்றி என்று பொருள். நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் இந்த காலத்தில் நீங்கள் தாராளமாக தொடங்கலாம். சித்த யோகத்தில் நீங்கள் செய்யும் அனைத்து நல்ல காரியங்களும் எந்தவித தடைகளும், பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக நடந்து முடியும்.
சித்த யோகத்தில் என்ன செய்யலாம்?
இந்த சித்த யோகம் காலத்தில் வீடு வாங்குதல், தொழில் ஆரம்பிக்க, விவசாய பணி மேற்கொள்ள, புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்ள, ஒப்பந்தங்கள் கையெழுத்திட, பாதியில் நின்று போன பணியை தொடங்க, திருமணம் செய்ய, திருமணப் பேச்சுவார்த்தை தொடங்க என சுப காரிங்களுக்கு இந்த நாளை பயன்படுத்தலாம்.
எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கிழமைகளில் வந்தால் சித்த யோகம் என்று நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
சித்த யோகம் எப்படி கணக்கிடுவது:-
திங்கட்கிழமைகளில் அஸ்வினி, பரணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், உத்திரம் அஸ்தம், அனுசம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அன்று சித்தயோகம்.
செவ்வாய்க்கிழமை அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.
புதன்கிழமைகளில் பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.
வியாழக்கிழமைகளில் பரணி, பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, விசாகம், அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அது சித்தயோகம்.
வெள்ளிக்கிழமை பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.
சனிக்கிழமை அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், பூரம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர் பூசம், பூசம் ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, பூராடம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அவை இருக்கும் காலம் சித்த யோகம் என்று அழைக்கப்படுகிறது.