சித்த, மரண, அமிர்த யோகம் பற்றிய விளக்கங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்த, மரண, அமிர்த யோகம் பற்றிய பதிவுகள் :

சித்த யோகம்:

குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்ட திதியும், நட்சத்திரம் சேர்ந்து வந்தால் அது சித்த யோகம்.

மரண யோகம்

குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து இருப்பதோடு, அந்த கிழமையும் சேர்ந்து வந்தால் அது மரண யோகம் என குறிப்பிடப்படுகிறது.

அமிர்தயோகம்

ஒரு குறிப்பிட்ட கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றும் சேர்ந்து வந்தால் அது அமிர்த யோகம் என குறிப்பிடப்படுகிறது

அமிர்த யோகம் என குறிப்பிடப்படும் கிழமை, நட்சத்திரம், திதி சேர்ந்த நாட்கள் பட்டியல் :

ஞாயிற்றுக்கிழமை

உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்

திங்கட்கிழமை

சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்

செவ்வாய்க் கிழமை: 

உத்திரம், மூலம்

புதன் கிழமை: 

உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்

வியாழக்கிழமை

சுவாதி, மூலம்

வெள்ளிக்கிழமை

அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்

சனிக்கிழமை

மகம், சதயம், கார்த்திகை, சுவாதி

ஒருவரின் ஜாதகம் எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு மரண யோகம் கூட நல்ல பலனைத் தரும். மரண யோகம் என்பது மரணத்தை குறிப்பதல்ல. அந்த நாளில் செய்யும் காரியங்கள் விருத்தி அடையாது என்பதால், அந்த தினத்தில் சுப காரியங்களை தவிர்க்க சொல்கின்றனர்.

பொதுவாக மரண யோகம் என குறிப்பிட்டுள்ள நாளில் சுப காரியங்கள் செய்வது தவிர்ப்பது நல்லது.

பஞ்சாங்கத்தில் ஒரு நாள் எப்படிப்பட்டது என்பதை மட்டுமே குறிக்கும். அந்த நாள் நமக்கு உகந்த நாளாக இருக்கின்றதா என்பதை நம் ஜாதகப்படி மட்டுமே கணிக்க முடியும்.

இன்று சுப முகூர்த்தம், தொழில் விருத்தி, புதிய நிறுவனம் தொடங்கலாம் என போட்டிருக்கும். ஆனால் அன்று அவருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் அன்றைய தினம் அவருக்கு ஒத்து வராமல் போகலாம். இதனால் ஓரைகளை பார்த்து செயல்படுவது உத்தமம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top