நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சபரிமலையில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பற்றிய பதிவுகள் :

உலகமெங்கும் பல கோவில்கள் இருந்தாலும்
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பன் கோவில் தனிப்பெரும் சிறப்பு.

சபரிமலையில் நாளை ( நவம்பர் 17 ) ஆம் தேதி மண்டல பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் நடக்கும் சிறப்பு வழிபாடுகள் குறித்த முழு விவரங்களையும் மற்றும் பூஜைகளையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

சபரிமலை அய்யப்பன்:-

கார்த்திகை மாதம் என்றாலே எல்லோருடைய நினைவுக்கும் வருவது கார்த்திகை தீபமும் சபரிமலை ஐய்யப்பனும் தான். 

சபரிமலை ஐயப்பன் என்றாலே மிகவும் முக்கியமான பூஜையும் வழிபாடும் மண்டல பூஜையும் மகர ஜோதியும் தான். 

ஐயப்ப பக்தர்களும் மாலை போடுபவர்களும் சபரிமலைக்குச் செல்ல காத்திருப்பது இந்த மண்டல பூஜைக்காகத் தான்.

மண்டல பூஜை காலம்:-
சபரிமலை ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜையானது 41 நாட்கள் நடைபெறும். மலையாள மாதமான விருச்சிக மாதம் தொடங்கும் முதல் நாள் தான் மண்டல பூஜையும் தொடங்கும். 

இந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை தொடங்குகிறது. 

நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் இந்த மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27 ஆம் முடிவடைகிறது.

கடைப்பிடிக்கும் சடங்குகள் :-

இந்த மண்டல பூஜை காலத்தில் ஐயப்பனை வழிபடும் பக்தர்கள் தீவிர விரதத்தைக் கடைபிடிப்பார்கள். தங்களுடைய சுகங்களை மறந்து மிக எளிமையான வாழ்க்கை வாழ்வார்கள்.

ஐயப்பன் படம் பொறித்த துளசி மாலையை குருசாமி மூலம் அணிந்து கொள்வது வழக்கம். விரதம் இருந்து மலைக்குச் சென்று வரும்வரை அந்த மாலையைக் கழட்ட மாட்டார்கள்.

மனதையும் உடம்பையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். புகைப்பிடித்தல், மது அருந்துதல், தீய சொற்கள், தீய செயல்கள், ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இந்த விரத காலகட்டத்தில் தினமும் கட்டாயம் இரண்டு முறை குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும். இந்த விரத காலகட்டத்தில் தாம்பத்திய உறவு நிச்சயம் தவிர்க்க வேண்டும். அனுதினமும் ஐயப்பனே நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மகரவிளக்கு

மண்டல பூஜைகளுக்கு இடையில் வரும் மிக முக்கியமான நாளாக மகர சங்கராந்தி நாள் கருதப்படுகிறது. மண்டல பூஜை நாள் மகர விளக்கு என்று அழைக்கப்படுகிறது. 

இந்த மகர விளக்கு நாட்களில் புனிதமான சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் ஒவ்வொரு வருடமும் மகரஜோதியாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதை பார்ப்பதற்காக கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்து ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பனின் அருளைப் பெறுவார்கள்.

மண்டல பூஜையின் குறியீடு

பல்வேறு புராணங்களின் அடிப்படையில் மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது. தனக்கு வேண்டியதை நினைத்து மாலை போட்டு சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு நினைத்ததை நடத்திக் கொடுக்கும் அற்புத நாட்களாக இந்த மண்டல பூஜை நாட்கள் கருதப்படுகின்றது.

பூஜையின் விவரங்கள்:

மண்டல பூஜை தொடங்கி முடிவடையும் 41 நாட்களும் கோயில் திறப்பது முதல் இரவு நடை சாத்தப்படும் வரையில் சில பூஜைகளும் சடங்குகளும் ஐயப்பனுக்கு நடத்தப்படும். 

அந்த காலத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு கோவிலுக்குச் சென்றால் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, அதற்கான முழு பலன்களைளும் உங்களால் பெற முடியும். 

மண்டல பூஜை நாட்களில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

அதிகாலை 3.05 மணிக்கு நிர்மால்ய தரிசனம். அதைப் பார்ப்பது மிக விசேஷமானது. நிர்மால்ய பூஜை என்பது முதல்நாள் இரவு நடை சார்த்தப்படும் போது இறைவன் அணிந்திருந்த ஆடை, ஆபரங்கள் அனைத்தும் களையப்படும். அந்த சடங்கு தான் நிர்மால்ய பூஜை எனப்படும்.

அதிகாலை 3.15 மணிக்கு ஐய்யப்பனுக்கு நெய்யபிஷேகம் நடைபெறும்.

அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும்.

அதன்பின் காலை 7.30 மணிக்கு மற்ற பூஜைகள் தொடங்க ஆரம்பிக்கும்.

7.30 மணிக்கு உஷ கால பூஜையும் 8 மணிக்கு நெய்யபிஷேகம் நடைபெறும்.

மீண்டும் 1 மணிக்கு உஷ கால பூஜையும் அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு நடை சார்த்தப்படும்.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெறும். 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடக்கும்.

இரவு 7 மணிக்கு ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகமும் 10 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும்.

10.50 க்கு ஹரிவராசனம் நடத்தப்பட்டு, இரவு 11 மணிக்கு மீண்டும் நடை சார்த்தப்படும்.

இதே பூஜை முறை தான் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் முழுவதும் நடைபெறும்.

Post a Comment

Previous Post Next Post