நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பூஜையின் போது மணி அடிப்பதன் சூட்சுமம் பற்றிய பதிவுகள் :

இறைவனின் அருளை வேண்டி மனமுருகி வேண்டும் ஒரு விஷயம் தான் பூஜை. ஆண்டவனை மனமுருக வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

பூஜையின் போது மணி அடிப்பதால் வீட்டிலுள்ள துர்தேவதைகள், எதிர்மறை சக்திகள் அனைத்தும் வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகள் மணி சப்தம் கேட்டால் பயந்து ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

தினமும் ஏன் மணி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்துவிடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும்.

துர்தேவதைகள் இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள். அதனால், துர்தேவதைகளை விரட்டி பூஜைகள் செய்ய வேண்டும்.

ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் மணியடித்து அதனை விரட்டுவார்கள்.

இதற்கு மற்றொரு காரணம் உள்ளது. பூஜையின் போது மணியடிப்பதால் அனைவரின் கவனமும் சிதறாமல் இறைவழிப்பாட்டில் இருக்கும். மனம் வேறு எந்த சிந்தனைக்கும் போகாமல் இருக்க பூஜையின் போது மணி அடிப்பார்கள்.

உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழுவதற்கும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறோம்.

மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

இறைவனை பூஜித்து அவனின் அருளை பரிபூரணமாக பெற்று வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெறுவோமாக.

Post a Comment

Previous Post Next Post