ஸ்ரீகல்யாண காமாக்ஷி வைபவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீகல்யாண காமாக்ஷி வைபவம் பற்றிய பதிவுகள் :

மஹா யோகஸக்தியான பராஸக்தியே அத்துனை க்ஷேத்ரங்களிலும் ஸகல தேவதாமூர்த்தமாக ப்ரஹாஸிக்கிறாள்!! அப்படி அந்த சித்சக்தியே தனது ஸ்வரூபத்தை ப்ரஹாஸப்படுத்தி ஜ்வலிக்கும் ஸ்தலங்கள் எண்ணிலடங்காதது!!  

அந்த மஹா ஸக்தி விளங்கும் பீடங்களிலே நமக்கு சற்றென்று நினைவுக்குவருவது ஆதி பீடமான மஹோட்யாண பீடம் ஸ்ரீ காஞ்சிபுரக்ஷேத்ரம் அங்கே பரதேவதை காமாக்ஷி பராபட்டாரிகையாக ப்ரஹாஸிக்கிறாள்!!  

ஸ்ரீ காமகோடீ பீடத்திற்க்கடுத்து பரதேவதை "கல்யாண காமாக்ஷி" என்ற நாமதேயத்தோடு ஜ்வலிக்கும் க்ஷேத்ரம்!! இதில் அதிஸூக்ஷ்மம் என்னவென்றால் தாந்த்ர ஸாஸ்த்ரங்களில் பராஸக்திக்கு பஞ்சதஸாக்ஷரீ மந்த்ர கர்பிதமாக வரும் நாமாவளிகளில் "கல்யாணி" "லலிதா" எனும் நாமங்கள் அதிவிஷேஷமானது!!    

இந்த "லலிதா" எனும் நாமத்திற்க்கு உண்டான ஸாஹஸ்ரமே இப்போது நாம் பாராயணம் செய்யும் லலிதா ஸஹஸ்ரநாமம்!! இதைப்போல் மந்த்ர ஸாஸ்த்ரங்களில் ஸ்ரீலலிதா மஹா த்ரிபுரஸுந்தரீக்கு பதினைந்து விதமான ஸஹஸ்ரநாமங்களுண்டு!!  

அதைப்போல "கல்யாணி" என்ற நாமபரமாக விளங்குவதே இப்போது வழக்கிலுள்ள "லலிதா த்ரீஸதீ" இதுவும் பதினைந்து விதமான பேதங்களை கொண்டதேயாம்!!   

அப்படி அம்பாள் லலிதா த்ரீஸதீக்கு ப்ரமாணமாக பஞ்சதஸாக்ஷரீ மந்த்ரகர்பிதமாக விளங்கும் ஸ்தானமே "தருமபுரீ தகடூர் கல்யாண காமாக்ஷி க்ஷேத்ரம்" இருகால்கள் இறுகமடித்து மஹா யோகத்தில் விளங்கும் ஸ்ரீ காமாக்ஷி மஹாத்ரிபுரஸுந்தரீயே இங்கு எழுந்து நின்ற கோலத்திலே காக்ஷியளிக்கிறாள்!!  

பதினைட்டுவிதமான புராணங்களும், பர்வதங்களும், தேவதைகளும், மந்த்ரங்களுமே தேவீயின் முன்பாக இங்கு படிகளாக ப்ரஹாஸிக்கின்றன!! கார்த்திகை சதயநக்ஷத்ரத்தில் ப்ருங்கி மஹருஷிக்கு சிவஸக்தி ஸாமரஸ்யத்தை உணர்த்தவும் அதே ஸமயம் நான் அந்த காமேச்வரனுக்கும் "மஹேச்வரீ" என்று பராஸக்தி உணர்த்திய ஸ்தலம்!! 

பண்டாஸூர வதத்தில் மஹிஷாஸூரனை பண்டன் மீண்டும் ச்ருஷ்டிக்க மூலசைதன்ய மூர்த்தமாம் "கல்யாணகாமாக்ஷி" யிடமிருந்து ஸ்ரீ மஹாஸூலிநி துர்காம்பாளாக மஹிஷனை வதைத்த பஞ்ச ஸ்தலங்களில் இதுவும் ஒன்று!! துர்கையே மூலமூர்த்திக்கு ப்ரதான பரிவார தேவதையாய் ஜ்வலிக்கும் மூன்று ஸ்தலங்களில் ப்ரதம ஸ்தானமிந்த க்ஷேத்ரம்!!   

ஸ்ரீ ரஸ்மி மாலாதி மந்த்ர தேவதைகள் ஸாக்ஷாத் ஸ்ரீ லலிதாம்பாளின் அஸ்த்ரங்களே அந்த ரஸ்மிமாலாதி மந்த்ர தேவதைகளே அதிஸூக்ஷ்மமாக தேவீயை உபாஸிக்கும் ஸ்தானம்!! லங்காஸூர வதத்திற்க்கு முன்பு ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ நாரதர் உபதேஸப்படி ஸ்ரீ ராமலக்ஷ்மணர்கள் தேவீயை ஸ்ரீ சக்ரத்தை ப்ரதிஷ்டித்து உபாஸித்த ஸ்தலம்!!   

ஸ்ரீ லலிதா த்ரீஸதியில் விளங்கும் "ஸ்ரீ லக்ஷ்மணாக்ரஜ பூஜிதா" எனும் நாமாவளிக்கு இந்த க்ஷேத்ரமே ப்ரமாணமாம்!! ஸ்ரீ மஹா காமேச்வரரே லிங்காகாரமாக மல்லிகார்ஜூனர் என்ற நாமதேயத்தோடு ப்ரஹாஸிக்கிறார்!! ஸ்வாமியின் ஸந்நிதியை விட தேவீயின் ஸந்நிதியே இங்கு உயர்ந்தது!! 

ப்ரதோஷ மஹா புண்யகாலங்களில் அத்தனை தேவதைவதாதியர்களும் "ஸ்ரீ ஸாம்ப மஹாபரமேச்வரரான" ஸ்வாமியை வலம்வருவது ஐதீகம்!! ஆனால் ஸ்வாமியே ப்ரதோஷகாலத்தில் ஸ்த்ரீகள் ஸ்ரீ பாதம் தூக்க ஸ்வாமியே தேவீயை ப்ரதக்ஷிணம் செய்வதும், மார்த்தாண்ட பைரவரே ஸ்ரீ சக்ரத்தோடு ஸ்ரீ சக்ரபைரவேஸ்வரராக இருப்பதும் இந்த க்ஷேத்ரத்தில்தான்!!  

ஸனக,ஸநந்தன, ஸநத்குமாராதியர்களும், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ ந்ருஸிம்ஹர், ஸ்ரீ ராமலக்ஷ்மணர்கள், ஸ்ரீ க்ருஷ்ணர், ஸ்ரீ நாரதர், ஸாம்ப பரமேச்வரர், பஞ்சபாண்டவர்கள் என தேவீயை ஸ்ரீ சண்டி நவாக்ஷரீ மஹாமந்த்ரத்தினாலும், ஸ்ரீ மத் பஞ்சதஸாக்ஷரீ மஹா மந்த்ரத்தினாலும் தேவீயை உபாஸித்த ஸ்தலம்!!  

மன்மதனின் ப்ராணனை வழங்கி ரதியின் மாங்கல்யத்தை ரக்ஷித்ததால் இவள் கல்யாண காமாக்ஷி!! "கல்யாண" என்ற பதத்திற்க்கு "மங்களம்" என்று பொருள்!! தன்னை வேண்டுவோருக்கும், உபாஸிப்போருக்கும் அமங்களங்களை நீக்கி மங்களங்களை ப்ரஸாதிப்பதால் இவள் "மங்கள ரூபிணி" "மங்கள காமாக்ஷி!!"   

தேவீயிங்கு ஸர்வரோஹஹர சக்ரமயமான ஸ்தானத்திலே விளங்குவதாலே பவரோஹத்தை ந்வ்ருத்தி செய்து போகமோக்ஷத்தை மாத்ரமே அனுக்ரஹிக்கும் பரமகருணாம்ருத ஸாஹரமாக ஜ்வலிக்கின்றாள்!!  

இத்தனை வைபவங்களை கொண்ட அந்த "ஆத்யா மஹா ஸக்தியே" நமக்காக நமது தாயாராக ஸ்ரீ மாதாவாக மஹா மந்தஸ்மிதத்தோடு விளங்குகிறாள்!!

ஜய ஜகதம்ப ஸிவே 
ஜய ஜய காமாக்ஷி!!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top