பொதுவாக மாவிலையை 9, 11, 21, 27, என்கிற எண்ணிக்கையில் தான் வாசலுக்கு கட்ட வேண்டும்.
மாவிலையை பச்சை பசேலனை இருப்பதை ( நெற்றிப்பகுதி ) முன்னால் வரும்படி கட்ட வேண்டும்.
அமங்கலத்தில் எக்காரணத்தைக் கொண்டு கட்டக்கூடாது என்று நிபந்தனை உண்டு.
மாவிலை சிவபெருமானின் திருச்சடை என்று குறிக்கப்படுகிறது.
ஆதலால் தான் கோவில் விழாக்களில் மாவிலையை கலசத்துக்குள் வைக்கிறார்கள்.
மாவிலையை வீட்டில் கட்டுவதால் என்னென்ன நன்மைகள்?
1. சிவபெருமான் அருள் கிடைக்கும்.
2. லட்சுமி கடாட்சம் பெருகி செல்வம் தங்கும்.
3. உங்கள் வீட்டில் மங்கலம் நிலைக்கும்
4. துஷ்ட சக்திகள் நீங்கும்.
5. மாவிலையின் நுனி நம் தலைஉச்சிமீது படுவதால் நம் உடம்பு தூய்மையடையும். காரணம் சிவபெருமான் திருச்சடையில் தான் கங்கா தேவி குடியிருக்கிறாள்.
6. காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கிரகித்து வைக்கும் தன்மை கொண்டது.
7. பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் தன்மை கொண்டது.
மேலும் பல நன்மைகள் உங்கள் வீட்டில் என்றைக்கும் நிலைக்கும்.
மாவிலையை வாடியபிறகு தண்ணீர் பகுதியில் விட்டு புதியதாக கட்டவேண்டும்.