சுக்ரவார பிரதோஷம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுக்ரவார பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

பிரதோஷ காலம் - சூரியாஸ்தமனத்தோடு ஆரம்பிக்கிறது. பிரதோஷ காலம், பரமேஸ்வரனை தியானம் செய்வதற்குத் தகுந்த காலம். அதாவது ஈஷ்வரனை, தன் வசப்படுத்திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும்.

உலகம் ஒடுங்கும் வேளையில் நம் மனதும் ஈஷ்வரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம் - சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கி கொள்ளும் நேரம்.

வில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சரிப்பு பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வதுபோல ஈஷ்வரன், தான் விட்ட சக்தியை எல்லாம் தன்வசப்படுத்திக் கொள்கிறான். பிரதோஷ காலத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால், வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும்.

உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரி ஆரம்பத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம். அதனால் இரவு நித்திய பிரளய காலமாகக் கருதப்படுகிறது. நித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பக்ஷிகள், மாடுகள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள் கூட விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர்.

அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமா கலயிப்பதற்கு தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தில் நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகிறது. அப்போது சஞ்சாரம் செய்யும் பூதப் பிசாசுகள்கூட அந்த நர்த்தனத்தில் லயித்து, யாருக்கும் உபத்திரவத்தை கொடுக்கமாட்டா. 

அது கண்கட்டு வித்தை போல நடக்கிறது. கூத்தாடி யாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால், பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்துவிட்டு, தான் நினைத்ததைச் செய்து விடுகிறான்.

உஷத் காலத்தில் ஹரி ஸ்மரணையும் சாயங் காலத்தில் சிவநாம ஸ்மரணையும் உகந்தவை நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு பிரதோஷ வேளைதான் முக்கியம்.

இப்படி சிவனை வழிபடுவதற்கும் சிவ பஜனை செய்வதற்கும் எல்லோருக்கும் வீட்டில் வசதி இருக்காது. அதற்காகவே பெரும் சிவன் கோயில்களைக் கட்டினார்கள்.

பிரதோஷ வேளையில் பரமேசுவரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்வதால், அந்த வேளையில் நாம் ஈசுவரனை வழிபட வேண்டும்.

சுக்ர வார பிரதோஷம்:

பிரதோஷம் வரும் மாதம், கிழமை ஆகியனவற்றைக் கொண்டு அதை வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் ஒரு தனிச் சிறப்பும் பலனும் கூறப்படுகிறது. இன்று நிகழும் பிரதோஷம், 'சுக்ர வார பிரதோஷம்' என்று போற்றப்படுகிறது. சுக்ரன் என்றால் வெள்ளி. வெள்ளிக்குரிய இந்த நாளில் வரும் பிரதோஷம் சுக்ரவார பிரதோஷம் எனப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகள், அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாள். பிரதோஷ காலத்தில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி மற்றும் சிவனுக்கு நிகழும் அபிஷேகங்களை கண்டு வழிபடுவது சிறப்பாகும். 

இன்று ஈசனுக்கு, மகாலட்சுமியின் அம்சமான வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்ய, கடன் தொல்லைகள் நீங்கும். செல்வ வளம் சேரும் என்று நம்பப்படுகிறது. இன்று ஈசனுக்கு பால் சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்க, சகல பாவங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.  

நந்தியெம்பெருமானே

கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்

நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்

அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்

நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்

ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்

பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்.

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top