ரத சப்தமி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ரத சப்தமி பற்றிய பதிவுகள் :

பிப்ரவரி 07-02-2022 பிலவ வருடம் தை மாதம் 25ம் நாள் திங்கள் கிழமை அஸ்வினி நட்சத்திரம் சப்தமி திதியுடன் ரத சப்தமி நிகழ்கிறது

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதமாகும். 
இவ்விரதமானது சூரிய பகவான் தன்னுடைய தட்சினாயன பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் வட கிழக்கு திசையான உத்திராயண திசையை நோக்கி செலுத்தும் தொடக்க மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

தை மாத அமாவாசை முடிந்து 7ஆம் நாள் ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானை வணங்கும் பண்டிகையான ரத சப்தமி சனிக்கிழமை வழிபடப்படுகிறது. உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி விரதம். 

தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். சூரியன் வட திசை நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறார். அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த தினத்தை சூரிய ஜெயந்தியாகவும் அழைக்கின்றனர். 

வசந்த காலம் ஆரம்பம் 

ஜோதிட சாஸ்திரம் அடிப்படையில், சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் வட திசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத சப்தமி தினத்தன்று ரத சப்தமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள படி, வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் ரத சப்தமி நாள் விளங்குகிறது. ரத சப்தமி என்பது சூரிய பகவான், தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வட கிழக்கு திசை நோக்கி செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

காலத்தை உருவாக்கும் சூரியன் சூரிய பகவானின் தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் என்பவர், மஹாவிஷ்ணுவின் பெரிய திருவடி என பயபக்தியோடு அழைக்கப்படும் கருட பகவானின் சகோதரர் ஆவார்.

சூரிய பகவான் வலம் வரும் தேரின் சக்கரம் உத்திராயணம், தட்சிணாயனம் என இரண்டு பாகங்களைக் கொண்டது. சூரிய பகவான் தன்னுடைய தேரில் ஏறி வலம் வந்து காலை, நண்பகல், மாலை, அர்த்த ராத்திரி என நான்கு பட்டணங்களை சுற்றி வந்து காலங்களை உருவாக்குகிறார்.

ஏழு குதிரைகள் பூட்டிய தேர் காஷ்யபர் ஆசி வழங்கியது போலவே, பிரகாசமான ஒளியுடன் சூரிய பகவான் மகனாக பிறந்தார். வானவில்லைப் போல ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார். இந்த ஏழு குதிரைகளும் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்களைக் குறிக்கிறது. சூரிய பகவான் வலம் வரும் அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உண்டு.

பிச்சை கேட்ட பிராமணர் 

சப்ர ரிஷிகளில் ஒருவரான காஷ்யபர்-அதிதி தம்பதிகளின் மகன் தான் சூரிய பகவான். அதிதி கர்ப்பவதியாக இருந்த போது, ஒரு நாள் காஷ்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, அங்கே ஒரு பிராமணர், ‘தாயே பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று பிச்சை கேட்க, அதற்கு அதிதி, சற்று இருங்கள் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு நடக்க முடியாமல் மெதுவாக நடந்து வந்து காஷ்யபருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின்பு, ஆகாரத்தை எடுத்து வந்து அந்த பிராமணருக்கு கொடுத்தாள்.

சாபமிட்ட பிராமணர்

தாமதமாக வந்து பிச்சை போட்ட அதிதியைப் பார்த்து பிராமணர், என்னை காக்க வைத்து, தாமதமாக வந்து உணவை அளித்து, ‘என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். அதனால், உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்' என கோபப்பட்டு சாபமிட்டார். பிராமணரின் சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, நடந்த விஷயத்தை காஷ்யபரிடம் சொல்ல, அதற்கு அவர், கவலைப்படாதே, அமிர்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத பிரகாசத்துடன் ஒரு மகன் நமக்கு கிடைப்பான், என்று ஆசீர்வதித்தார்.

சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகான 7வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. 

ரத சப்தமி அன்றுதான் சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாத காலத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். ரத சப்தமி நாளையொட்டி கங்கை உள்ளிட்ட புண்ணிய ஆறுகள், தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவார்கள். 

இன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சூரிய உதயத்தில் குளியல்

ரத சப்தமி நாளில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று நீராடுவது சிறப்பு. அப்படி போக முடியாத சூழ்நிலையில் இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி குளிக்க வேண்டும். 

ரத சப்தமியன்று காலையில் குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்க இலைகளை ஏழு எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை வைக்க வேண்டும். ஆண்கள் அதனுடன் விபூதியும், பெண்கள் அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இந்த இலைகள் அடுக்கைத் தலைமீது வைத்து குளிக்க வேண்டும். நோய்கள் தீரும் 

அதிகாலையில் குளிக்கும் போது எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கண்களில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்று என எருக்கம் இலைகளை வைத்து, தண்ணீர் விட்டுக் கொள்ளவேண்டும். பெண்கள், தலையில் எருக்கம் இலையுடன் மஞ்சள் கலந்த அட்சதையையும் ஆண்கள் அட்சதையை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்குகிறது.

ஆரோக்கியம் அதிகமாகும்

புருஷா சூக்தா சூரியனை ஸ்ரீமன்நாராயணன் (சக்ஷோ! சூர்யோ அஜயாதா) கண்களிலிருந்து பிறந்தவர் என்றும், விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படுகிறது என்றும் விவரிக்கிறார். சூரிய கடவுளை சூர்யா என்று பிரபலமாக பல பெயர்களால் அழைக்கிறார்கள்; 
ஆதித்ய; மித்ரா; ரவி; ச விதா; அர்கா; பாஸ்கர; மரிச்ச; திவாகர; பானு; சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு மக்களும் சூரியனை ப்ரத்யக்ஷா தெய்வம் என்று வணங்குகிறார்கள்.

ஸ்ரீ ராமர் சூர்ய வம்சத்தில் பிறந்தார்; இக்ஷ்வாகு வம்சத்தின் குடும்ப தெய்வம் சூரிய கடவுள், ஸ்ரீ சூர்ய நாராயணா. ஸ்ரீ ராமர் ராவணாசுரனைக் கொல்லச் செல்வதற்கு முன்பு சூரியனை வணங்கினார். பாண்டவர்களின் மூத்த சகோதரர் யுதிஷ்டிரா (தர்மராஜா) சூரியனை வணங்கிய பிறகு அக்ஷய கிண்ணத்தைப் பெற்றார். துருவாச முனிவர் அளித்த வரத்தின் காரணமாக கர்ணனைப் பெற்றெடுப்பதற்கு முன்பு பாண்டவர்களின் தாயார் குந்தி தேவி சூரியனை வணங்கினார். சத்ராஜித் (ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமாவின் தந்தை) சூரிய கடவுளை வணங்கிய பின்னர் சியமந்தக மணிக்கு ஆசீர்வதிக்கப்பட்டார். 

ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஜம்பவதியின் மகன் சம்பா, சூரியனை வணங்கிய பின்னர் தனது தொழுநோயிலிருந்து விடுபட்டார். இவ்வாறு சூரிய வழிபாட்டைப் பற்றிய பல புராணக் குறிப்புகளைக் காண்கிறோம். ஹனுமான் சூரியக் கடவுளிடமிருந்து வியாகரணத்தைக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ரத சப்தமியின் இந்த புனித நாளுக்காக பீஷ்மா பிதாமா காத்திருந்தார், ரதா சப்தமி பீஷ்மாஷ்டமி என்று அழைத்த மறுநாளே அவரது இறுதி மூச்சு விட்டார்.

ரத சப்தமியின் சுங்க மற்றும் மரபுகள்

அர்கா பாத்ராவுடன் குளிப்பது: ரத சப்தமி நாளில் ஒருவர் அருணோதய காலாவின் போது (சூரிய உதயத்திற்கு முன்) ஏழு அர்கா இலைகளுடன் (எண்ணிக்கையில் 7) தலையில் ஒன்றை வைத்து, இரண்டு தோள்கள், முழங்கால்களில் இரண்டு மற்றும் கால்களில் இரண்டு. குளித்த பிறகு அர்ஜியாவை சூரிய கடவுளுக்கு கொடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top