விநாயகர் விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் விரதம் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

அதிலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

விரத முறைகள் : 

சதுர்த்தியன்று அதிகாலை நீராடி உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். 

முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம். 

சதுர்த்தியன்று மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். 

அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

பலன்கள்

பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால், நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்கும்.

கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கி, அறிவுக்கூர்மை உண்டாகி கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top