சோமசூக்தப் பிரதட்சணம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சோமசூக்தப் பிரதட்சணம் பற்றிய பதிவுகள் :

சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இது பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது

நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும்.

பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.

ஆலகால விஷம் வெளிப்பட்ட போது தேவர்கள் இங்கும் அங்கும் அலைந்ததை நினைவு கூறும் விதமாக இந்த பிரதட்சணம் செய்யப்படுகிறது. 

“ஓம் ஆம் ஹவும் சவும்” என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம், நமது முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும். 

பஞ்சமாபாதகங்கள் :

1. பொய் சொல்லுதல், 
2. கொலை செய்தல், 
3. பேராசைப்படுதல், 
4. வீணான அபகரித்தல், 
5. குருவை நிந்தித்தல் போன்றவை.

எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top