நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீராத நோயையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த கருட மந்திரம் பற்றிய பதிவுகள் :

எல்லோருக்குமே இறைவன் திருவடியை சரணடைய வேண்டும் என்பது தான் விருப்பம். அத்தகைய திருவடியை சரண் அடைந்து இருக்கும் கருடாழ்வார் பெரிய திருவடி என்ற பெயரால் போற்றப்பட்டு வருகின்றார்.

எப்பொழுதுமே நம் சமயத்தைப் பொறுத்தவரை நாகமும், கருடனும் தனித்துவமான மற்றும் மகத்துவமான இடங்களைப் பிடித்திருக்கின்றன. 

இதில் மகாவிஷ்ணுவின் வாகனமாக இருக்கும் கருடன் அதீத சக்தி பெற்று இருக்கிறார்.

இவரிடம் அமிர்த கலசம் இருந்தும் அதனை அவர் சுயநலமாக பயன்படுத்தியதில்லை என்கிறது புராணம். மனித உயிர்களை காக்க நாகத்தின் கொடிய விஷயங்களை அடக்கி ஆள்பவராக இருக்கின்றார். 

அதனால் கொடூர விஷத்தையும் முறியடிக்கும் சக்தி கருடாழ்வாருக்கு உண்டு. விஷத்தினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவரின் சார்பாக இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும். 

எத்தகைய நோயையும் ஒன்றுமில்லாமல் செய்யக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம் தான் கருடாழ்வார் மந்திரம். இம்மந்திரத்தை தினந்தோறும் உச்சரிப்பவர்களுக்கு எத்தகைய நோயும் அணுகுவதில்லை.

கருடாழ்வார் மந்திரம்:

அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்!
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்!
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்!
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!

கருடாழ்வார் மந்திரத்தின் பொருள்:

அமிர்த கலசத்தை கையில் ஏந்தி இருப்பவரே!
எல்லா தேவ தேவியர்களால் துதிக்கப்படுபரே!
தம் பெருமையை எவராலும் விவரிக்க முடியாதவரே!

பரந்து விரிந்த இவரின் இறக்கை வாயு, அண்டமெல்லாம் நடுநடுங்க செய்யும்!

இவரை துதிப்பவர்களுக்கு நாகத்தின் விஷம் அகலும்,
விஷத்தால் ஏற்பட்ட நோய்களும் நீங்கும்!

பட்சிகளுக்கு ராஜனாக விளங்கும் பட்சிராஜன் கருடாழ்வாரை என் சிந்தையில் நிறுத்தி வணங்குகிறேன் என்பது பொருளாகும்.

நோய்கள் நீங்கவும், விஷ முறிவு ஏற்படவும், மாங்கல்ய பலம் நீடிக்கவும் கருடாழ்வாரை சனிக் கிழமைகளில் அல்லது பஞ்சமி திதியில் வழிபடலாம். 

அவருக்கு புளியோதரை நைவேத்தியம் வைத்து, துளசி தீர்த்தம் அருகில் வைத்து, பசு நெய் விளக்கேற்றி, தூப தீப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். 

பின்னர் வீட்டிற்கு வெளியில் சென்று வானை நோக்கி கருடன் பறப்பதாக நினைத்து மூன்று முறை நமஸ்கரிக்க வேண்டும். 

இவரை வணங்குபவர்களுக்கு தடைபட்ட சுபகாரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும், கடன் என்னும் தரித்திர நிலையிலிருந்து மீட்டு எடுக்க கூடியவர் இவர், வாகன ரீதியான விபத்துகளில் இருந்து பாதுகாக்க கூடியவர், யம பயத்தைப் போக்குபவர், பாவங்களை நீக்கி புண்ணியங்களை சேர்க்கக் கூடியவர்,

எத்தகைய கவலையும் தீர கருடனை வணங்கினால் சுபிட்சம் பெறுவார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருடன் வழிபாடு ஒவ்வொருவரும் செய்து நற்பலன் பெறலாமே.

Post a Comment

Previous Post Next Post