இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள் பற்றிய பதிவுகள் :

முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். அப்படிப்பட்ட பிளையாரின் புகழ் பெற்ற கோயில்கள் எங்கெல்லாம் அமைந்துள்ளது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

கற்பக விநாயகர் கோயில் :

கற்பக விநாயகர் கோயில் அல்லது பிள்ளையார்பட்டி கோயில் என்று அறியப்படும் தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற விநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

சித்தி விநாயகர் கோயில் :

மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயகர் கோயில் 1801 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தொட்ட கணபதி கோயில் :

பெங்களூரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில், புகழ்பெற்ற காளைக்கோயிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோயில் அமைந்துள்ளது.

கொட்டாரக்கரா ஸ்ரீ மாகணபதி கோயில் :

கொட்டாரக்கரா கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மாகணபதி கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது.

சுயம்பு கணபதி கோயில் :

மகாராஷ்டிராவின் கணபதிபுலே நகரில் கரீபியன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே கடற்கரையில் சுயம்பு கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் விசேஷமான அம்சம் என்னவென்றால் இங்குள்ள கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானது.

லக்ஷ்மிபூர் கணபதி கோயில் :

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு லக்ஷ்மிபூர் நகரில் லக்ஷ்மிபூர் கணபதி கோயில் அமைந்துள்ளது.

சாசிவேகாலு கணேசா :

இக்கோயில் கர்நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ம்பி நகரத்தில் மேகூட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top