சோடசக்கலை நேரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சோடசக்கலை நேரம் பற்றிய பதிவுகள் :

நம்முடைய கஷ்ட காலங்களுக்கு விடிவு காலம் பிறக்க, சித்தர்களால் இந்த பிரபஞ்சத்திற்கு நிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த சோடசக்கலை நேரம். பௌர்ணமி திதி முடியும் தருணத்திலும், அமாவாசை திதி முடியும் தருணத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரும். அந்த நேரத்தை தான் சோடசக்கலை நேரம் என்று சொல்லுவார்கள். 

இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பிரபஞ்சத்திடம், அந்த இறைவனிடம் என்ன வேண்டுதலை வைத்தாலும் அது நமக்கு உடனே கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இன்று சித்ரா பௌர்ணமி. இந்தப் பிரபஞ்சத்தில் இறை சக்தியும், நேர்மறை ஆற்றலும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த நாளில், வரக்கூடிய சோடசக்கலை நேரத்தை யாருமே தவறவிடாதீர்கள்.

இன்று நிறைந்த சித்ரா பௌர்ணமி. அதாவது சனிக்கிழமை 16.4.2022 அன்று சித்ரா பவுர்ணமி. இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 12:16 am முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 2:16 am வரை சோடசக்கலை நேரம் இருக்கின்றது. சனிக்கிழமை நடுராத்திரியில் இந்த சோடசக்கலை நேரம் வந்திருக்கின்றது. கண் விழித்து தான் இந்த நேரத்தை நீங்கள் பயனுள்ள நேரமாக மாற்றி கொள்ள வேண்டும்.

குறிப்பிட்டு சொல்லப்படும் இந்த சோடசக்கலை நேரத்தில் உங்களுடைய வீட்டில் வரவேற்பறை அல்லது பூஜை அறை எங்கு வேண்டுமென்றாலும் அமர்ந்து கொள்ளலாம். கிழக்கு பார்த்தவாறு கீழே ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாசனை மிகுந்த ஊதுபத்தியை ஏற்றி வைத்துவிட்டு சம்மணம் போட்டு முதுகு தண்டுவடம் நேராக இருக்கும்படி அமர்ந்து, உங்களுடைய ஆழ்மனதில் நம்பிக்கையுடன் நேர்மறையுடன் வேண்டுதலை வைக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் நிச்சயம் இருக்கக் கூடாது. (உங்களால் தரையில் அமர முடியாது என்றால் நாற்காலியின் மீது சோஃபாவின் மீதோ அமர்ந்து கொள்ளலாம்.)

இந்த நேரத்தில் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எது தேவையோ, அதில் இருந்து ஒரே ஒரு குறிக்கோளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அதை ஆழ் மனதில் உச்சரித்து தியான நிலையில் அந்த ஒரு நல்ல விஷயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடமும் உங்கள் குலதெய்வத்திடமும் கேளுங்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அதி அற்புதம் வாய்ந்த சோடசக்கலை நேரம் நமக்கு இருக்கின்றது. உங்களால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எவ்வளவு நேரம் தியான நிலையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை வைக்க முடிந்தாலும் வைக்கலாம். முழுநேரமும் அமர்ந்து வேண்டுதல் வைக்க முடியாது என்பவர்கள் 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரார்த்தனை பொய்த்துப் போவதற்கு வாய்ப்பே கிடையாது. காரணம் சோடசக்கலை நேரத்தில் நாம் என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top