சிதம்பரம்:-
தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் அருகிலேயே உள்ளார்.
விருதுநகர்:-
ரெயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் உள்ளார்.
ஆடுதுறை:-
ஆபத் சகாயேச்வர் கோவிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார்.
தபசுமலை:-
புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ-. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.
காரைக்குடி:-
இங்கு ரெயில் நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
படப்பை :-
தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் படப்பை என்னும் இத்தலம் உள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புடன் அமைத்துள்ளார்.
தேவக்கோட்டை:-
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இங்குதான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.
அந்தியூர்:-
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர்-பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
தாடிக்கொம்பு:-
திண்டுக்கல் அருகி லுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஷேத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோவிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.
பஞ்சமுக பைரவர்:-
முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள் பாலிக்கிறார்.