தீராத பிரச்சினையை தீர்க்கும் கடவுள் வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீராத பிரச்சினையை தீர்க்கும் கடவுள் வழிபாடு பற்றிய பதிவுகள் :

தீராத கஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் போது, இந்த கடவுளை இப்படி வேண்டிக் கொள்ளுங்கள் போதும். உங்கள் தலையெழுத்தே மாற்றி எழுதப்படும்.

தீராத கஷ்டங்களில் சிக்கித்தவிக்கும் தருணங்களில் பல பேருடைய வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தை இதுதான். ‘என் தலை எழுத்தை எதற்காக அந்த ஆண்டவன் இப்படி எழுதினான். எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டங்கள். போன ஜென்மத்தில் நான் செய்த பாவம் தான் என்னை இந்த ஜென்மத்தில் துரத்தி அடிக்கிறது போல, இந்த தலையெழுத்து மாறவே மாறாத! கஷ்டங்கள் தீரவே தீராதா! என்று நிச்சயமாக அந்த ஆண்டவனை நினைத்து நாம் புலம்புவது இயற்கைதான்.

இப்படி துக்கம் நிறைந்த சமயத்தில் கஷ்டங்கள் சூழ்ந்த நேரத்தில் நாம் எந்த இறைவனை எப்படி வழிபாடு செய்தால் இதற்கான விடிவு காலம் பிறக்கும், என்பதைப் பற்றிய ஆன்மீக ரீதியான ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம் தலையெழுத்தை எழுதியவர் அந்த பிரம்மா. அந்த தலையெழுத்தை மாற்ற கூடிய சக்தியும் அந்த பிரம்மனுக்கு தான் உண்டு. இருப்பினும் ஏனோ நாம் பிரம்மாவை நினைத்து வழிபாடு செய்து வேண்டிக் கொள்வதே கிடையாது. பிரம்மாவிற்கு உரிய ஸ்தலமான, பிரம்மா கோவில் திருச்சியில் இருக்கும் திருப்பட்டூரில் அமைந்துள்ளது. ஆனால் எல்லோராலும் இந்த கோவிலுக்கு சென்று விட முடியாது.

அதற்கான நேரமும் காலமும் நமக்கு அமைந்து வரவேண்டும். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் பாக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த பிரம்மதேவரின் தரிசனம் கிடைக்கும் என்று கூட சொல்லலாம். முடிந்தால் நீங்களும் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது, உங்களுடைய வாழ்க்கைக்கு நல்லது.

சரி, திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் பிரம்மனை தரிசிக்க முடியாத சூழ்நிலை அதற்கு அடுத்தபடியாக பிரம்மதேவனை எப்படி வழிபாடு செய்வது. நம் வீட்டின் அருகில் கட்டாயம் சிவன் கோவில்கள் இருக்கும். அந்த சிவன் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது மூலவருக்கு பின்பக்கம் உள்ள சுவற்றிலோ அல்லது பக்கவாட்டிலோ நிச்சயமாக பிரம்மாவின் சிலை இருக்கும்.

மூன்று தலை கொண்ட பிரம்ம தேவரை, பிரகாரத்தை வலம் வரும் போதும் நாம் கவனிப்பது கிடையாது. பெரும்பாலான பழைய கோவில்களில் பிரம்மாவிற்கு என்று கட்டாயமாக ஒரு தனி சிலை பிரகாரத்தை சுற்றி வரும் போது இருப்பதை பார்க்கலாம்.

பிரகாரத்தை வலம் வரும்போது பிரம்மதேவரின் சிலை இல்லை என்றாலும், கட்டாயமாக கோபுரத்தில் பிரம்ம தேவரை நம்மால் நிச்சயமாக காண முடியும். ஏதாவது ஒரு ரூபத்தில் கோவிலுக்கு செல்லும்போது நீங்கள் இந்த பிரம்ம தேவரை நினைத்து, பிரம்ம தேவரை தரிசனம் செய்து இரண்டு கைகளையும் ஏந்தி ‘உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும். உங்களுடைய தலையெழுத்து மாற வேண்டும் என்று தொடர்ந்து மனமுருகி வழிபாடு செய்து வர வேண்டும்.’ இந்த வழிபாடு நிச்சயமாக உங்கள் துயர் துடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top