வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்று கூறுவது உண்டு. அந்த வகையில் மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது. தென்னிந்தியாவில் செவ்வாயோ வெறும் வாயோ என்ற வழக்கு உள்ளது.
எனவே, அன்றைய தினம் தெய்வ வழிபாடு சிறந்தது எனக் கூறுவர். மேல்நோக்கு நாள், நல்ல நட்சத்திரம் இருந்து அமிர்தயோகமான செவ்வாய்க்கிழமையில் வீடு/மனை வாங்க முன்பணம் அளிப்பதுடன், ஒப்பந்தமும் போடலாம், வியாபாரம் துவங்கலாம், செங்கல் தொழில், கட்டிட கட்டுமானம் ஆகிய தொழில்கள் துவங்கவும் உகந்தது. பொதுவாகவே, மருந்து உண்பதற்கும், ரத்த தானம் செய்வதற்கும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் செவ்வாய்க்கிழமை உகந்தது.
வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்று கூறுவர். அன்றைய தினம் இறைவனை வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். இறந்தவரை எழுப்புவிக்கும் சஞ்சீவி மந்திரம் அறிந்தவர் சுக்கிராச்சாரி என ஜோதிட கூறுகிறது. சூட்சும சக்தி உடையவராக சுக்கிரன் கருதப்படுகிறார்.
எனவே, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறைவனை வணங்கினால் காரிய சித்தி கிடைக்கும். தோஷக் குறைகளும் நிவர்த்தியாகும்