பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி - வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி வசந்த ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பது அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அம்பிகை கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக - அர்த்த நாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

 இந்த நாட்களில் தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

நமது ஸ்ரீமத் ஔஷத லலிதா தர்பார் ஆலயத்தில் லலிதோபாக்யானம் வழியாக நவராத்திரி பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து அம்பிகையை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top