நினைத்ததை நிறைவேற்றும் திருவிளக்கு பூஜை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நினைத்ததை நிறைவேற்றும் திருவிளக்கு பூஜை பற்றிய பதிவுகள் :
  
வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷம். அவ்வகையில் ஆடி வெள்ளி அல்லது தை வெள்ளிக் கிழமையில் துவங்கி 16 வாரங்கள் தொடர்ந்து அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும்.

ஆடி அல்லது தை மாதம் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்கலாம். 

அதாவது, வீட்டில் எப்போதும் செய்யும் பூஜையுடன், ஒரு அகல் விளக்கை ஏற்றிவைத்து குலதெய்வம், பிள்ளையார், இஷ்ட தெய்வத்தை வேண்டி நம் கோரிக்கையை மனதில் நினைத்து கும்பிட வேண்டும். 

அடுத்த வெள்ளிக்கிழமையில் 2 அகல் விளக்குகள் ஏற்றவேண்டும். இப்படியே ஒவ்வொரு வாரமும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். பதினாறாவது வாரம் பதினாறு அகல்விளக்குகள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து பூஜையை முடிக்கவும். 

பூஜை முடிக்கும் வாரம் குறைந்தது 5 பேருக்கு (கன்னிப் பெண்கள் இருவர் உட்பட), பிரசாதத்துடன் தாம்பூலம், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வழங்கவேண்டும். 

பதினாறு வாரத்துக்குள்ளாகவே நல்ல பலன் கிடைக்கும். இடையில் விளகேற்ற முடியாத நிலை வந்தால் கணவர், மகன், மகள் யாராவது விளக்கேற்றலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top