சிவ தரிசனத்திற்கு உகந்த நேரம் பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் சிவனை வழிபடுவதால் அனைத்துக் கஷ்டங்களும் விலகி செல்வ செழிப்பான வாழ்வு மலரும் என்பது நம்பிக்கை.
திரியோதசி மற்றும் தேய்பிறை திரியோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையுள்ள காலமே பிரதோஷ காலமாகும். அப்போது சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று நடனம் புரிந்து தேவர்களுக்குத் தரிசனம் தந்தருளுவதாக நம்பிக்கை.
சிவபெருமானின் அருளைப்பெற விரும்புகிறவர்கள் எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது அருளைப் பெறலாம்.
• சோமவார விரதம் - திங்கள் தோறும்
• உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை
• பௌர்ணமி விரதம்.
• திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை.
• மஹா சிவராத்திரி விரதம் - மாசி மாத தேய்பிறை சதுர்தசி.
• கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்
• பாசயத விரதம் - தைப்பூசம்.
• அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி.
• கேதார கௌரி விரதம் - ஐப்பசி அமாவாசை.