பிரம்ம முகூர்த்த பலன்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரம்ம முகூர்த்த பலன்கள் பற்றிய பதிவுகள் :

உடல் ஆரோக்கியம், மன அமைதி, செய்யும் காரியங்களில் வெற்றி இவையெல்லால் கைகூடுவதற்கு பெரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை.

உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த உஷஸ் தேவதை தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற்காலத்தை உஷத் காலம் என்று சொல்கின்றோம். 

தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருந்தாலே போதும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அறிவியல் ரீதியாகவும், வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. 

பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் வேலை செய்யவேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால் தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழவேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்து வித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது.

தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரிசெய்ய லட்சுமி கடாட்சத்தை, நினைத்த காரியங்களை நிறைவேற்ற நீங்கள் இந்த பிரம்மமுகூர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top