விரதம் இருக்கும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரதம் இருக்கும் முறைகள் பற்றிய பதிவுகள் :

அமாவாசை, சதுர்த்தி, பௌர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. 

விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். 

விரதம் இருப்பவர்கள் அளவாக பால் மற்றும் பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் சூரிய உதயத்தில் தங்கள் விரதத்தை தொடங்கி சூரிய அஸ்தமனத்தில் அன்றைய நாள் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். விரதத்தின் போது உணவு உட்கொள்வதால் முழு கவனமும் உணவை நோக்கி ஈர்க்கப்படும் என்பதாலே விரதத்தில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்த்து உண்ணா விரதத்தை மேற்க் கொண்டனர்.

மிதமான உணவை உட்கொண்டும் விரதத்தை கடைபிடிக்கலாம். விரதம் இருப்பவர்கள் அமைதியான சூழலில் அல்லது ஆலய தியான மண்டபத்தில் ஒரு துணி விரித்து அதன் மேல் அமர்ந்து இரு கண்களையும் மூடி முதுகுத் தண்டை நேராக வைத்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.

வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்ய கூடாது. தியானம் செய்யும் போது ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அல்லது அந்தந்த மூர்த்திகளுக்கான மந்திரத்தை உச்சரித்தவாறு தியானிக்க வேண்டும். மந்திரத்தை உரக்க உச்சரிக்க கூடாது. 

கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யும் போது ஆண்கள் மேலாடை அணிய கூடாது. மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிந்திருக்கக் கூடாது. ஆடம்பரத்தை தவிர்த்து தியானத்தில் அவர்வது சிறப்பு.

பூட்டியிருக்கும் ஆலயங்களில் சென்று தியானம் செய்ய கூடாது. வீட்டில் விரதமிருப்பவர்கள் உங்கள் விரதம் முடிவடையும் வரை வீட்டின் பூஜையறையில் தாய்விளக்கு எரிந்துக் கொண்டிருக்க வேண்டும்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்கக்கூடாது?

• வயது முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top