வித்தியாச கோலத்தில் காட்சி தரும் விநாயகர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வித்தியாச கோலத்தில் காட்சி தரும் விநாயகர் பற்றிய பதிவுகள் :

அரசமரம், வன்னிமரம் என மரத்தடியில் குடி கொண்டிருப்பவர் விநாயகர். விநாயகர் சிலைகளை ஏராளமாக பார்த்திருந்தாலும் சில வித்தியசாமான விநாயகர் பற்றிய செய்திகளை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். அவற்றைப் பற்றி விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

10 திருக்கரங்களுடன், வலது காலை பூமியில் ஊன்றி, இடதுகாலை மடித்து வைத்து, அதில் தேவியை இருத்திக்கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். இவரை ஊர்த்துவ கணபதி (அ) ஸ்தம்ப கணபதி என்றழைக்கிறார்கள்.

 பாம்பின் மீது கால் ஊன்றி, நடனமிடும் பாவனையில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இந்த பிள்ளையாருக்கு பாம்பு நர்த்தன பிள்ளையார் என்று பெயர்.

8 அடி 4 அங்குல உயரம், 4 அடி 2 அங்குல அகலம், 3 டன் எடை கொண்டு ரித்ரா விநாயகர் என்ற நாமத்துடன் திகழ்கிறார் இந்த விநாயகர். இவரை கர்நாடக கணபதி என்று அழைப்பர்.

தனது ஒரு கரத்தால் கதாயுதத்தைப் பற்றிக்கொண்டும் இன்னொரு கரத்தில் பணியாரம் நிரம்பிய பாத்திரம் ஏந்தியும் அழகாக தரிசனமளிக்கிறார் விநாயகர். இவரை பணியாரப் பிள்ளையார் என்று அழைப்பர்.

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலயத்தின் ஈசான திசையில் காட்சி தருகிறார் புழுங்கல் வாரிப் பிள்ளையார். ஒரு சந்தர்ப்பத்தில் கோவில் நைவேத்யத்திற்குப் புழுங்கல் அரிசி தட்டுப்பாடு ஏற்படவே, இவரை பக்தர்கள் வேண்டிக்கொள்ள, புழுங்கல் அரிசியை மழை போல் வாரித் தந்தவராம் இவர். அதனால் இவருக்கு புழுங்கல்வாரிப் பிள்ளையார் என்று பெயர் வந்தது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top