சுக்கிர பகவான்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுக்கிரன் பற்றிய பதிவுகள் :

ஆய கலைகள், அனைத்து விதமான ஆசாபாசங்களுக்கும் அதிகாரம் பெற்றவர், சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு களத்திர காரகன் என்ற அந்தஸ்து உண்டு. 

இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும் கிடைக்கும்.

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும்.

பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடலாம்.

 சுக்கிரனின் விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். 

வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும். சுக்கிர பகவானை வணங்கி வழிபட்டு அவரது அருள் கடாட்சம் பெறுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top