பெண் வடிவில் காட்சிதரும் விநாயகர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பெண் வடிவில் காட்சிதரும் விநாயகர் பற்றிய பதிவுகள் :

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் என்று அனைவரும் போற்றும் கணஷே மூர்த்தி பெண் வடிவிலும் காட்சி தருகிறார்.

பெண் வடிவிலான விநாயகரை விக்னேஸ்வரி, விநாயகி, கணேசனி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.

பவானியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் விநாயகியைக் கண்டு தரிசனம் செய்யலாம்.

அதே போல் நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசிக்கும் புலிக்கால்களைக் கொண்ட வியாக்ரபாத விநாயகியை தரிசிக்கலாம்.

ஆணாக இருந்து பெண்ணாக காட்சியளிக்கும் வக்ரதுண்ட விநாயகர் சிறப்பு வாய்ந்த சக்தியை அருளக் கூடியவர். பெண் வடிவில் காட்சியளிக்கும் பிள்ளையாரை வணங்கி அனைத்து வளமும் நலமும் கிடைக்க பெறுவோமாக.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top