ஜேஷ்ட பஞ்சமி திதியில் ஸ்ரீ வாராஹி வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஜேஷ்ட பஞ்சமி திதியில் ஸ்ரீ வாராஹி வழிபாடு பற்றிய பதிவுகள் :

இன்று ஆனி மாத பஞ்சமி திதி. ஜேஷ்ட பஞ்சமி. இன்று வாராகி அம்மனை வழிபட வேண்டிய நாள். சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

எல்லோரும் பஞ்சமி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவருக்கான விஷயங்கள்( உதாரணமாக கல்விபயில, தொழில் தொடங்க, திருமணம் செய்ய) என புதிதாக தொடங்கும் எந்த ஒரு செயலிலும் ஒருவித தடை, தாமதம் , கஷ்டம் ஏற்படும்.

இந்த ஜாதகர்கள் பஞ்சமி திதியில் பாம்பு புற்று உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று 5 எண்ணெய் கலந்து அல்லது நல்லெண்ணெய் சிகப்பு திரி போட்டு குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி நம் வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துகொண்டே வழிபட வேண்டும்.

நிவேதனமாக பூண் கலந்து தோல் நீக்காத உளுந்த வடை அல்லது நவதானிய வடை மிளகு சேர்த்த வடை, தயிர்ச்சாதம், மொச்சை, சுண்டல், பானகம் ஆகியவவை நிவேதனமாக படைக்கலாம்.

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ… என்ற மந்திரத்தை சொல்லி வழிபட எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்

குறிப்பாக ஏவல், பில்லி, சூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும். ஆனி மாத பஞ்சமி, ஆடி மாத பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வாராஹி வழிபாட்டினை செய்தால் சிறப்பான பலனை அருள்வாள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top