பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போல் ஒருவர் பிறக்கும் கிழமையும் முக்கியமானது. எண்கணித அடிப்படையில் குறிப்பிட்ட கிழமையில் பிறந்தவர்களின் குணநலன்கள் அறிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை
கடின வேலைகளை மிக எளிதாக, திறமையாக முடித்து சாதனை படைப்பார்கள். உற்றார் - உறவினர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.
திங்கட்கிழமை
அமைதியான மனம் படைத்தவர்கள். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் கொண்டவர். எதிரிகளையும் நண்பர்களாக பாவிப்பர். தர்ம நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதி கொண்டவர். இவர்களுக்குச் சொந்தத் தொழில் கைகொடுக்கும்.
செவ்வாய்க்கிழமை
இவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் வைத்தது தான் சட்டம், தான் நினைப்பது தான் சரி எனும் மனப்போக்குடன் இருப்பர். நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.
புதன்கிழமை
நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள். மற்றவர்களின் மனதில் உள்ளதை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர் என்று உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.
வியாழக்கிழமை
இவர்கள் நீதி-தர்மத்துக்கு கட்டுப்படுபவர். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு பாடுபடுவர். உற்றார், உறவினர்களுக்கு உதவிபுரிவர். எந்தத் துறையில் ரூடவ்டுபட்டாலும் முன்னேற்றம் அடைவர்.
வெள்ளிக்கிழமை
பேச்சாற்றலால் மற்றவர்களை தன் வசப்படுத்துவர். தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார்கள்.
சனிக்கிழமை
இவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டு தான் மற்ற வேலைகளைத் தொடங்குவர். சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர்.