இனிமேல் நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற சூழ்நிலையில் நம்பிக்கையோடு வாராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நிச்சயமாக நம்முடைய கஷ்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும். முடிந்து போன உங்களுடைய வாழ்க்கை மீண்டும் நல்லபடியாக தொடர ஆரம்பிக்கும்.
உதாரணத்திற்கு வீட்டில் இருப்பவர்களுக்கு யாருக்காவது தீராத நோய் பிரச்சனை இருக்கலாம். அல்லது வருமானத்திற்கே வழி இல்லாமல் வாழ வழி இல்லாமல் நடுவீதியில் நிற்கக்கூடிய நிலைமை இருந்தாலும் சரி, ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாலும் சரி, நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிடித்து வைத்து அதை வாராகி என்று நினைத்து வழிபாடு செய்தால், இந்த உலகத்தில் வாழ்வதற்கு உண்டான தகுதி அனைத்தும் உங்களைத் தேடி வரும்.
நிற்கதியாக நிற்பவர்களை கூட நிமிடத்தில் கோபுரத்தின் உச்சியில் அமர வைக்க கூடிய சக்தி வாராகி தாய்க்கு உண்டு. ஆனால் உங்களுடைய வேண்டுதல் உங்களுடைய சரணாகதி என்பது முழுமையாக உண்மையாக இருக்க வேண்டும். கஷ்ட காலத்தில் வாராகி அம்மனை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஒரு சின்ன ஆன்மீக ரீதியான வழிபாடு இதோ உங்களுக்காக.
இந்த வழிபாட்டை சனிக்கிழமை, சனி ஹோரையில் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பரிகாரம் செய்ய வராகி அம்மனின் திருவுருவப் படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறிது மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்து, மஞ்சள் பிள்ளையார் போல பிடித்து வைத்து அதை வாராகித் தாயாக நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்தாலும் கை மேல் பலன் கிடைக்கும்.
சனிக்கிழமை சனி ஹோரை நேரத்தில் வாராகி அம்மன் படத்தை துடைத்து செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். செம்பருத்திப்பூ இல்லை என்றால், நீல நிற சங்குப்பூ, சிவப்பு நிற அரளிப்பூ வைத்து கூட அலங்காரம் செய்து கொள்ளலாம். அதன் பின்பு ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் பத்து வெண் கடுகுகளை போட்டு, தீபம் ஏற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள். நிவேதியமாக ஒரு டம்ளர் பானகம் வைத்தால் கூட போதும்.
பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள். வராகி அம்மனை மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டம் தலைக்கு மேல் போய்விட்டது தப்பிக்க வழியே இல்லை என்று வரும்போது அந்த தீபம் எறிந்து முடியும் வரை உறுதியாக தீபத்தின் முன்பு அமர்ந்து மன உறுதியோடு வாராகி அம்மனிடம் உங்கள் கஷ்டத்தை சொல்லி, அந்த கஷ்டம் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் ஒரு சில வாரங்களில் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வினை அந்த அம்பாள் காட்டிக் கொடுப்பாள
இருள் நிறைந்த உங்கள் வாழ்க்கையில் ஒளி வீச வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வாராகி அம்மனுக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள். விடாப்படியாக அவளுடைய பாதங்களை பற்றி கொண்டால், உங்களுக்கு இருக்கும் கஷ்டம் தீருவது உறுதி. கஷ்டம் தீரும்வரை சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டினை செய்யலாம். கஷ்டம் இல்லை என்றாலும் சந்தோஷமான வாழ்க்கையை நிரந்தரமாக வாழ, கெட்டது நம்மை அண்டாமல் இருக்க, தினம் தோறும் வாராகி அம்மன் வழிபாடு செய்வது நல்லது.