ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவர் பற்றிய பதிவுகள் :

உலகில் வேறு எங்கும் காணவியலாத அதிசய அதியற்புத திருவுரு அமைப்பு கொண்ட தெய்வம் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர்.

ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் விலகும். ஆயிரம் கோயில் சென்று வணங்கிய பலன் உடனே கிட்டும். நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் இருக்கும் இடத்தில் சொர்ணம் செழித்துக் கொண்டே இருக்கும்.

திருவாலய சிறப்பு:

கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹாமஹா சொர்ணாகர்ஷன பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் முப்பெரும் தேவ தேவியர் சொரூபம். அதாவது ஸ்ரீமஹாகாளி, சரஸ்வதி, லக்ஷ்மி ஐக்கிய சொரூபினி சமேத ஸ்ரீமஹா சிவ விஷ்ணு பிரம்ம ஐக்கிய சொரூபர். அஷ்ட பைரவி சமேத அஷ்ட பைரவர் சொரூபம். 

அஷ்டாஷ்ட பைரவி சமேத அஷ்டாஷ்ட பைரவர் சொரூபம். நினைத்ததை நினைத்தபடி தரும் தேவலோகத்தில் இருக்கும் தெய்வீக சக்திகள் நிறைந்த தெய்வீக மரமான கற்பக மரத்தின் அடியில் பத்ர பீடத்தில் அமர்ந்திருப்பவர். இந்திராதி தேவர்களால் வணங்கப்படுபவர்.
குபேரனுக்கு நவநிதிகளையும் அஷ்ட லக்ஷ்மி களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கக்கூடியவர். 

குபேரனும் அஷ்டலட்சுமிகளும் செல்வத்தை மக்களுக்கு வழங்குவதால் அவ்வப்போது குறையும் செல்வத்தை நிரப்பிக் கொள்ள திரும்ப வழிபடுவதும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரையே. நவநிதிகளில் இருபெரும் நிதிகளான சங்கநிதி, பத்மநிதியை ஸ்ரீமஹா சொர்ண பைரவி அம்மையை சற்றே அணைத்த வாறு தன் மேல் திருக்கரங்களில் தாங்கி இருப்பவர். சங்கநிதி என்பது 1×16 பூஜ்ஜியம் போட்டால் எவ்வளவு சொத்து மதிப்பு கொண்டதோ அதனை கொண்டது.

பத்மநிதி என்பது 1×32 பூஜ்ஜியம் போட்டால் எவ்வளவு சொத்து மதிப்பு கொண்டதோ அதனை கொண்டது. தம் மடியில் வைத்து உள்ள பூரண அம்ருத கும்பத்தில் இவ்வுலகில் உள்ள சர்வ தேவ தேவதா தெய்வங்களும் நோய் நொடிகளை தீர்க்கக்கூடிய, சிரஞ்சீவியாய் வாழ வைக்கும் அமிர்தமும் நிறைந்து உள்ளது. 

கீழ் திருக்கரங்களில் அபய, வரத முத்திரை அதாவது காக்கும் மற்றும் அருளும் முத்திரையோடு அதாவது தம்மை உள்ளன்போடு நல்ல நம்பிக்கையோடு வழிபடும் பக்தக் கோடிகளுக்கு அனைத்து வளங்களையும் வழங்கி அரவணைத்து காத்து அருள்மழை பொழிவேன் என்ற அழகு திருக்கோலம் பூண்டுள்ளார். 

ஸ்ரீமஹா சொர்ணபைரவி அம்மையோ ஒரு திருக்கரத்தால் ஐயனின் இடுப்பை வாஞ்சையோடு அன்பு மிகுக் கொண்டு தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தால் தம் மடியில் உள்ள வற்றாத ஜீவ நதியாய் அட்சயப்பாத்திரமாய் எப்போதும் சொர்ணம் சுரந்து சுரந்து பொங்கி வழிந்து கொண்டே இருக்கிற சொர்ண கும்பத்தை தம்மை வழிபடும் நன்மக்களுக்கு சொர்ண மழை யாக பொழிந்து கொண்டே இருக்க அதனை இறுக பிடித்து வைத்துள்ளார். 

இருவரும் புன்னகை பூக்கும் திருமுகங்களுடன் சர்வானந்த கோலாகலராய் அமர்ந்து தம்மை நாடி தேடி வரும் பக்தக்கோடிகளுக்கு அருள்மழை, பொருள் மழை, தன மழை, சொர்ண மழை என வாரி வாரி வழங்கும் பெரு வள்ளலாய் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இது போன்றதொரு தெய்வ திருவுருவ அமைப்பு உலகில் வேறு எங்கு தேடினாலும் காணக் கிடைக்காதது. 

இந்த உலகம் என்று தோன்றியதோ அன்று முதல் 2010ல் இப்பிறவியில் பைரவ உபாசகராக, நிறைய புண்ணிய நதிகளில் புனித நீராடிய, எண்ணற்ற மஹான்களையும், சித்தர்களையும் பல்லாயிரக் கணக்கான திருவாலயங்களையும் இந்தியா முழுவதும் சென்று தரிசனம் செய்த நிறைய ஆன்மீக, இறையனுபவங்கள் நிறைக்கப் பெற்ற, மனித உருவில் தெய்வங்களை தரிசனம் செய்த, இறைவனோடு எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் இமயமலை மற்றும் கொல்லிமலை குகைகளில் தவம் செய்த, ஞான தபோவனர்களை காந்தம் போல் கவர்ந்து இழுக்கும் திருவண்ணாமலையில் 2003ல் ஸ்ரீமஹா பைரவப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப் பெற்ற ஸ்ரீசொர்ண வேம்புச்சித்தன் ஆகிய எம்மிடம் 2006 முதல் காக்கும் தெய்வம் ஸ்ரீமஹா பைரவர், நகரத்தார் சீமையில் அற்புத திருத்தலங்கள், சொர்ணம் சொரியும் சொர்ண பைரவர், ஸ்ரீவைஷ்ணவ ரகசியங்கள், அழகன் திருமுருகனின் திருத்தலங்களும் வழிபடும் முறைகளும், வினை நீக்கும் விக்னஹர விநாயகர், கொல்லூர் மூகாம்பா போன்ற நிறைய ஆன்மீக நன்நூல்களை எழுதச்செய்து, 2008ல் தியானத்தில் தோன்றி திருவிசநல்லூரில் இடம் வாங்க சொல்லி 2010ல் காசியில் வந்து தங்கு, மணிகர்ணிகா காட், ஹரிச்சந்திரா காட் போன்ற சுடுகாடுகளிலும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆலயங்களிலும், காசி கால பைரவர் ஆலயத்திலும் தியானம் மேற்கொள்ள செய்து கேதார்காட்டில் அமர்ந்து ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஅஷ்ட பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் செய்ய சொல்லி பின் அங்குள்ள இரு சுடுகாடுகளில் இருந்து சாம்பல், திருவாலயங்களில் இருந்து பெறப்பட்ட விபூதி பிரசாதங்களையும் ஒரு கலசத்தில் கொண்டு சென்று பூஜை செய்து வா பின் வந்து சொல் கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு பின்னொரு நாளில் மறுபடியும் தியானத்தில் தோன்றி "எமக்கொரு ஆலயம் எழுப்பு" என்று சொல்ல யாமோ "இவ்வுலகில் இதுவரை எவருக்கும் காட்டியிராத அதிசய அதியற்புத திருவுருவக் காட்சியை காட்டி அருளினால் திருவாலயம் எழுப்புவோம்" என்று சொல்ல அவரோ "அவ்வாறே காட்டிய ருளுவோம்" என்று சொல்லி அதன்பின் சிற்சில நாட்களில் காட்டியருளிய தெய்வ திருவுருவம் தான் உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காத இந்த அதிசய அதியற்புத தெய்வ திருவுருவம் தான் இப்போது பக்தக்கோடிகள் ஆகிய நீங்கள் எல்லோரும் தரிசித்து செல்லும் தெய்வத் திருவுருவம் ஆகும்.  

ஒரு சித்தருக்கு திருக்காட்சி காட்டி அந்த சித்தரிடமே ஆலயம் எழுப்ப சொல்லி உலகை, உலக மக்களை தம் பக்கம் ஈர்த்து அவர்களை உய்விக்க வந்த மிக சிறந்த பெருங்கருணை கொண்ட பெருந் தெய்வம். தினசரி இரவு வேளைகளில் சர்வ தேவ தேவதா தெய்வங்களும், சர்வ சித்த ரிஷி, முனிவர்களும் குபேரனும், அஷ்டலட்சுமிகளும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். சர்வாலய பைரவர்களும் இங்கு வந்து ஒன்று கூடுகின்றனர். இறை சக்தி மிகுந்த இந்த இடத்தில் வந்து வேண்டும் போது நீங்கள் ஆயிரம் கோயில்களுக்கு சென்று வணங்கும் போது கிட்டும் பலன் இந்த ஒரு திருவாலயத்திலேயே கிட்டும்.

 இப்போது திருவாலயம் அமைந்திருக்கும் இடம் 500 ஆண்டுகளுக்கு முன்னே ஒரு பிறவியில் சொர்ணஸ்ரீவேம்புச்சித்தராகிய யாம் ஜீவசமாதி ஆகிய இடம். தெய்வ அருள் அனுக்கிரகம் இயற்கையிலேயே நிறைந்த இடம்.

இந்த திருவாலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. வேறு பரிவார தேவ தேவதா தெய்வங்களும் கிடையாது. ஏனெனில் இங்கு அம்மையப்பன் முப்பெரும் தேவ தேவியர் சொரூபம்.குபேரனுக்கும் அஷ்ட லட்சுமிகளுக்கும் நவநிதிகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவர் . 

மேலும் இவர் நவக்கோள்களுக்கு பிராணன் ஆக இருப்பதுடன், 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் இவர் உடலின் அங்கங்களாக இருப்பதாலும், பிரபஞ்சம் முழுவதும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், கால சக்ராதிபதியாக திகழ்வதாலும், அஷ்ட திக் பாலகர்களை நிர்வகிப்பவரும் இவரே.

நவக்கிரகங்களில் சூரியனின் அதிப்பிரத்யட்ச பிராண தேவதையான ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட சிம்ம ராசி சிம்ம லக்கினக்காரர்கள் வந்து வழிபட சூரியனின் அனுக்கிரகம் பன்மடங்கு கிட்டும்.

எல்லா ராசி, நட்சத்திர க் காரர்களும் வந்து வழிபட்டு பலன் பெற வேண்டிய அதிசய அதியற்புத தெய்வம்.

 குருவின் திசையான வடக்கே அமர்ந்து குருவாகவும் திகழ்கிறார். மீன ராசி மீன லக்னக் காரர்கள் இங்கு வந்து வழிபட குருவின் அருள் பன்மடங்கு கிட்டும். 

இவர் மடியில் உள்ள பூரண அமுதகும்பத்தில் சர்வ தேவ தேவதா தெய்வங்களும் அடங்கியிருப்பதாலும் நோய் நொடிகளை தீர்க்கக் கூடிய என்றென்றும் சிரஞ்சீவியாய் வாழ வைக்கக் கூடிய அமிர்தம் அதில் நிறைந்து இருப்பதாலும் இவரை வணங்க உலகில் உள்ள எல்லா தெய்வங்களையும் வணங்கிய பலன்களும் நோய் நொடிகளுக்கு ஒரு தீர்வும் ஒருங்கே கிடைக்கும்.

மேலும் இத்திருவாலயத்தின் உள்ளே நுழையும் முன் அன்பிற்கும் நன்றி உணர்வுக்கும் எடுத்துக்காட்டாய் திகழும் பைரவரின் வாகனமான ஸ்ரீமஹாசுவானமும், மக்களின் காவல் தெய்வமாய் விளங்கும் ஸ்ரீமஹா கருப்பண்ணசாமியும் காவல் தெய்வங்களாக இருந்து வரும் பக்தக் கோடிகளுக்கு பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.

 அரசு வேம்பிற்கு அருகில் வடமேற்கு மூலையில் ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி விநாயகர், ஈசானியம் எனும் வடகிழக்கே தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸ்ரீமஹா சொர்ண வடுக(கால) பைரவர், அரசு வேம்பின் அடியில் இரு நாகர்களுடன் கூடிய கிழக்கு நோக்கிய ஸ்ரீமஹா சொர்ண வேம்புவாலையம்மன் சன்னதிகளும் மிக விஷேச சக்திகள் நிறைந்தவை. இத்திரு சன்னதிகளில் வேண்ட தடைகள் அகலும். ஏவல், பில்லி, சூனியங்கள், சர்வ கஷ்ட நஷ்டஉபத்திரவங்கள், கடன் தொல்லைகள் போகும். சர்வ சாப பாப தோஷங்கள் விலகும். குழந்தைப்பேறு மற்றும் திருமணத்த்திற்கான தடைகள் விலகும். அனைத்தும் சுபமாய் அமையும். 

இங்கு வந்து கால் பதிக்க உங்கள் தலையெழுத்து மாறும். ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் விலகும். சர்வ சாப பாப தோஷங்கள், சர்வ கஷ்ட நஷ்ட உபத்திரவங்கள், தீராக்கடன் தொல்லைகள்,அதிதீவிர நாள்பட்ட நோய் நொடிகள் அகலும். திருமணத்திற்கான, குழந்தைப் பேறுக்கான, அன்றாட வாழ்வில், மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள சர்வ தடைகளும் விலகும். நினைத்தது நினைத்தபடி நடக்கும். கேட்டது கேட்டபடி கிடைக்கும். சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி, தனப்பிராப்தி, நல்ல உத்தியோகம், நல்ல திருமண வரன், குழந்தைப்பேறு, சொத்து சுகம், அதிகார மிக்க பதவி, புகழ், செல்வாக்கு என எல்லாம் கிட்டும்.

ஆலய அமைவிடம்:

திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத சிவயோகிநாதர் சதுர்கால பைரவர் கோவிலுக்கும் ஸ்ரீ அருமருந்து நாயகி அபூர்வ நாயகி சமேத கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில் நமது ஆலயம் அமைந்துள்ளது.

ஆலய திறப்பு நேரம்:

தினசரி திருவாலயம் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையும் மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரையும் திறக்கப் பெற்றிருக்கும்.

சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் ஹோமம்:

ஒவ்வொரு மாதம் வரும் அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களில் நமது ஆலயத்தில் காலை 09.00 மணிக்கு ஸ்ரீமஹா அம்மையப்பனுக்கு க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் 10.00 மணிக்கு ஸ்ரீகால, ஸ்ரீஅஷ்ட, ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் நடைபெறும். நான்கு நாட்களும் மதியம் அன்னதானம் நடைபெறும்.

நினைத்த காரியம் நிறைவேற:

ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவப் பெருமானுக்கு சம்பங்கி மாலை வாங்கி சாற்றி பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து இரண்டு தூய பசு நெய் தீபம் போட்டு ஆலயத்தை 27 முறை சுற்றி வழிபட்டு செல்ல நினைத்தது யாவும் நிறைவேறும்.

வீட்டில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க:

ஸ்வாமி சன்னதியில் 108 காசுகளை ஒரு மஞ்சள் பட்டுத் துணியில் சுற்றி ஸ்வாமி பாதத்தில் வைத்து பெயர் நட்சத் திரம் சொல்லி அர்ச்சனை செய்து இந்த முடிச்சை கொண்டு போய் காசு பணம் புழங்கும் இடத்தில் வைக்க பணப்புழக்கத்திற்கு பஞ்சமே வராது.

ஆலய முகவரி :

721, கற்கடேஸ்வரர் கோயில் சாலை, திருவிசநல்லூர்,
கும்பகோணம் -6121505
அலைபேசி: 94449 64303

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top