நவாவரண ரகசியம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவாவரண ரகசியம் பற்றிய பதிவுகள் :

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியானவள் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் அன்னை மூன்று ஸ்வரூபமாக அதாவது குழந்தை, குமரி, தாயாக வீற்றிருக்கிறாள். ஸ்ரீசக்கரத்துக்கு குங்கும அர்ச்சனை நடத்தப்படும் அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். 

இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக் குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பௌர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். மேலும் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடும் நடத்தப்படும்.

நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை , அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். 

அப்படி இருக்கும் போது புனிதமான பௌர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.  

எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. ஸ்ரீவித்யை ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை தந்திர ஆலயங்களில் பிரதி பெளர்ணமி மற்றும் விசேஷ திதி நாட்களில் ஸ்ரீமாதா லலிதாம்பிகை அருளை பெற்றுத்தரும் ஆவரண வழிபாடு மிக சிறப்பாகும். நவாவரண பூஜை சகல தோஷங்களை நீக்கி,சகல மங்களங்களை அருள்வது நிச்சயம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top