ஷரத் பூர்ணிமா என்னும் ஷரத் பௌர்ணமி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஷரத் பூர்ணிமா பற்றிய பதிவுகள் :

ஷரத் பூர்ணிமா என்பது வருடத்தில் சந்திரன் பதினாறு காலங்களுடன் வெளிவரும் ஒரே நாள் ஆகும். அதாவது இந்த நாளில் சந்திரன் வழக்கமான நாளை விட புதுப்பொலிவுடனும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

ஷரத் மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியே சாரதா நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த ஷரத் கால சந்திரன் போன்று அம்பாளின் முகம் பிரதிபலிப்பதால் இந்த ஷரத் பௌர்ணமி மிகவும் விஷேசமானது.

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தின் 129 வது நாமத்தில் "ஷரத் சந்திர நிவாரண" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஷரத் காலத்தில் வரக்கூடிய சந்திரனை போன்ற முகத்தையுடையவள்.

இதனால், ஷரத் பூர்ணிமா நாளில் சந்திரனை வழிபடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புதிதாகத் திருமணமான பெண்கள், ஷரத் பூர்ணிமா நாளிலிருந்து விரதத்தைத் தொடங்குகிறார்கள். குஜராத்தில் ஷரத் பூர்ணிமா ஷரத் பூனம் என்று மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சந்திரன் பதினாறு காலக்களுடனும் பிரகாசிக்கிறது. இதனால் அதன் கதிர்கள் உடலையும் ஆன்மாவையும் சீர்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.  

ஷரத் பூர்ணிமா தினத்தன்று சந்திரனின் கதிர்கள் அமிர்தத்தை சொட்டுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த தெய்வீக நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ள, பாரம்பரியமாக ஷரத் பூர்ணிமா நாளில் தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து நிலாச்சோறு உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

மேலும் வட இந்தியாவில் பசும்பால், அரிசி மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட ஒரு பிரபலமான இனிப்பு உணவான (ரைஸ்-கீர்) தயாரிக்கப்பட்டு இரவு முழுவதும் தங்கள் குடும்பத்துடன் நிலவொளியில் அமர்ந்து உட்கொள்கின்றனர்.

பிரிஜ் பகுதியில், ஷரத் பூர்ணிமா ராஸ் பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. ஷரத் பூர்ணிமா நாளில் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழலின் தெய்வீக இசையை வாசித்து கோபியர்களுடன் இரவு முழுவதும் நடனமாடினார் என கூறப்படுகிறது.

கோஜாகர விரதம் நாள் முழுவதும் அனுசரிக்கப்படும் போது பல இடங்களில் ஷரத் பூர்ணிமா கோஜாகர பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. ஷரத் பூர்ணிமாவை கன்னியா மாதம் என்றும் குமார பூர்ணிமா, கோஜகரி பூர்ணிமா, நவன்ன பூர்ணிமா, கௌமுடி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top