நவகிரகங்களில் செவ்வாய்க்கும் முருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. எல்லா கிரகங்களுக்குமே அதிதேவதை பிரத்யதி தேவதை என தேவதைகள் சில உண்டு.
அதன்படி செவ்வாய்க்கு அதிதேவதை பூமாதேவி ஆவார். செவ்வாய்க்கு பிரத்யதி தேவதை கந்தப்பெருமான் ஆவார். செவ்வாய்க்கும் பூமிக்கும் தொடர்புகள் உண்டு.
புராணக் கதைகளின்படி செவ்வாய் பூமியின் மகன். நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன். எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. அதிலும் ஆடிச் செவ்வாய் கிழமைகள் மிக மிக உயர்ந்தது.
போர் முறைகளை நன்கு கற்றதனால் அங்காரகனை நவக்கிரகங்களுள் ஒரு படைத்தலைவனாகவும், விநாயகர் அவனைச் சகோதரன் என்று அழைத்ததால் சகோதரகாரகனாகவும் விளங்க அருள் செய்தார்.
செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான், செவ்வாய் என்ற பெயரும், ஆலய வழிபாட்டில் அவருக்கு சிவப்பு வர்ணத் துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் சமர்ப்பணம் செய்கிறோம்.
நவக்கிர ஸ்தலங்கள் ஒன்பதில் செவ்வாய் கிரகத்திற்குரிய தலம் முருகன் சிறப்புடைய ஒரு தலமாக புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீஸ்வரன் கோவில் இருக்கிறது. இது செவ்வாய் கிரகத்திற்குரிய நவக்கிரக தலம் ஆகும்.
செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற பெயரும் உண்டு. அவன் குழந்தையாக இருக்கும் போது பூமிதேவி எடுத்து வளர்த்த காரணத்தால் இந்தப் பெயர் உண்டாயிற்று.
செவ்வாய் கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும்.