வாழ்க்கையை நிர்ணயிக்கும் லக்னாதிபதி

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாழ்க்கையை நிர்ணயிக்கும் லக்னாதிபதி பற்றிய பதிவுகள் :

எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக, இன்பமாக, வசதியோடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அப்படி வாழ்க்கை அமைவதில்லை. ஏற்ற, இறக்கமாக இன்பமும் துன்பமுமாக வாழ்க்கை அமைகிறது.

ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது அவரவரின் லக்னாதிபதிதான். உதய ஸ்தானம் எனும் லக்னாதிபதியே வாழ்வு முழுக்க ஜாதகரை நடத்திச் செல்லும். எனவே லக்னாதிபதியைக் கொண்டே ஒருவரின் வாழ்க்கையும், வளத்தையும் கெடுதலையும் கண்டறியலாம். 

லக்னாதிபதி கெட்டுப் போகும் நிலைகள் :

லக்னாதிபதி நீசமடைவது, கிரக யுத்தத்தில் தோல்வியுறுவது, பகை வீட்டில் இருப்பது, இரு பாபர்களுக்கு இடையே மாட்டிக் கொள்வது, லக்ன சந்தி 6,8,12-ல் இருத்தல், அம்சத்தில் நீசம் அடைதல் போன்ற அமைப்புகள் எப்போதும் துன்பத்தையே தரும்.

லக்னத்தில் தேய்பிறைச் சந்திரன் இருந்தாலும் மந்த புத்தியும், சொந்தக்காலில் நிற்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

லக்னாதிபதி பலம் இன்றி சூரியனுடன் சேர்ந்திருக்க, 2-ம் அதிபதி 12-ல் இருந்து நீசம் பெற்றால் எப்போதும் ஜாதகர் தந்திரராகவே இருப்பர். லக்னாதிபதி 8-ல் நின்றால் தீராத நோய், பகை, விபத்து போன்றவற்றை ஏற்படுத்துவார். லக்னாதிபதி 6-ல் இருந்தால் வட்டிச் சுமை, வழக்கு, எதிரிகள் பயம் ஏற்படும். லக்னாதிபதி 12-ல் இருந்தால் தூக்கம், பயணம், செலவு, கஷ்ட நஷ்டம் போன்ற பலன்கள் கிடைக்கும். 

லக்னாதிபதிக்கு பரிகாரம் :

லக்னாதிபதி சூரியனனாகிக் கெட்டிருந்தால் ஞாயிறுதோறும் ஒரு கை கோதுமையை நவகிரகங்களில் சூரியனின் பாதங்களில் வைத்து வணங்க வேண்டும்.

சந்திரனனாகிக் கெட்டிருந்தால், திங்கட்கிழமை தோறும் ஒரு கை பச்சரிசியை சந்திரன் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும்.

செவ்வாயாகிக் கெட்டிருந்தால் ஒரு கை துவரையை செவ்வாய்தோறும் அங்காரகன் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும். 

புதனாகிக் கெட்டிருந்தால் புதன்கிழமை தோறும் பச்சைப் பயிறு எடுத்து, புதனின் பாதத்தில் வைத்து வணங்கவும். 

 குருவாகிக் கெட்டிருந்தால் வியாழன்தோறும் வெள்ளைக் கொண்டைக் கடலையை அவரின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும். திருச்செந்தூர் முருகனையும் வணங்கலாம்.

சுக்கிரனாகிக் கெட்டிருந்தால் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளை மொச்சையை வைத்து வணங்க வேண்டும். 

 சனியாகிக் கெட்டிருந்தால் சனிக்கிழமைதோறும் சனீஸ்வரனுக்கு ஒரு பிடி கருப்பு எள்ளை அவர் பாதத்தில் வைத்து வணங்கலாம். 

லக்னாதிபதி கெட்டுப்போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் லக்னாதிபதியை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

Post a Comment

1 Comments
  1. ஐயா:

    லக்னாதிபதி பற்றிய தங்களுடைய பதிவு கவனிக்கத் தக்கதாக உள்ளது. நன்றி.

    ஆயினும் லக்னாதிபதி கெட்டுப் போயிருக்கிராறா இல்லையா, கெட்டுப் போயிருந்தால் எந்த கிரஹத்தால் கெட்டுப் போயிருக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி!

    ReplyDelete
Post a Comment
To Top