தீபாவளியில் கொண்டாட வேண்டிய முக்கிய விழாக்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபாவளியில் கொண்டாட வேண்டிய முக்கிய விழாக்கள் பற்றிய பதிவுகள் :

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.

2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.

3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்

4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்

5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

யம தீபம் 

ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். 

இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர். தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும் மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். 

அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

சாஸ்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:

உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.

யமத்துவிதியை

ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும்.

எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன்  சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன்  கூறுகிறார்.

இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.

நரக சதுர்த்தசி

குளியல் நேரம் அதிகாலை 03-00 மணி முதல் 06-00 மணிக்குள் குளிக்க வேண்டும். 

நல்லெண்ணையை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி பதினைந்து நிமிடம் ஊறவைத்து கொதிக்கும் வெந்நீரில் நாட்டு மருந்து கடைகளில்  கிடைக்கும் அரசம் பட்டை, புரசம் பட்டை, அத்திப் பட்டை, ஆலம் பட்டை, மாவிலிங்கப் பட்டை ஆகிய ஐந்து வகையான  மூலிகைப் பட்டைகளை ஊர வைத்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். 

அதன்பின்னர் சுக்கிரன்  ஹோரையில் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top