ஐப்பசி மாத விசேஷங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஐப்பசி மாத விசேஷங்கள் பற்றிய பதிவுகள் :

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று  ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறக்கிறது.

ஐப்பசி மாதம் துலாம் இராசிக்குரியது. துலாம் நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிகத்திற்குரியது.

காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார். காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

சக்தி நாயனார் குருபூஜை (18.10.22)

தேய்பிறை ஏகாதசி திதி

முருகன் சுக்ர வார விரதம் (21.10.22)

முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

சனி மஹாப் பிரதோஷம் (22.10.22) 

ஐப்பசி பூரம் அம்பாள் அவதார திருநட்சத்திர உற்சவம் வரும் 21.10.2022 வெள்ளி மாலை 22.10.2022 மாலை வரைஉள்ளது அம்பாள் அவதார பூரம் தரிசனம் சகலசெல்வத்தையும் பரிபூரணமாக அருளும் உற்சவம் மற்றும் சிலத்தலங்களில் திருக்கல்யாண வைபவம்நடைபெறும். இந்நாளில் குழந்தையான ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.                    

ஐப்பசிமாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது.

தனத்திரயோதசி (22 & 23.10.22)

ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. திருமகளின் அருளை சேர்க்கும் நாள். இன்றைய தினம் அட்சய திருதியைக்கு சமமானது.

தீபாவளி (24.10.22)

ஐப்பசி மாதம், தேய்பிறை (கிருஷ்ணபட்ச) சதுர்த்தசி திதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

கேதார கவுரி விரதம் (24.10.22)

ஐப்பசி அமாவாசை அன்று கடைப் பிடிக்கப்படும் உயர்ந்த சிவ விரதம்

கோவர்தன தினம் (25 & 26.10.22)

ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார். 

கந்த சஷ்டி : (25.10.22 முதல் 30.10 22 வரை)

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும்.  ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

30.10.22 சூரசம்ஹாரம்

31.10.22 முருகன் திருக்கல்யாணம்

பூசலார் நாயனார் குருபூஜை (27.10.22)

வாஸ்து நாள் (28.10.22)

ஐயடிகள் காடவர்கோன்  குருபூஜை (29.10.22)

பொய்கையாழ்வார் ஜெயந்தி (01.11.22)

பூதத்தாழ்வார்  ஜெயந்தி (02.11.22)

பேயாழ்வார் ஜெயந்தி (03.11.22)

ஐப்பசி சதயம் : (03.11.22)

தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள்

வளர்பிறை ஏகாதசி : (04.11 22)

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா” என்று அழைக்கப்படுகிறது.

சனி மஹாப் பிரதோஷம் (05.11.22) 

வளர்பிறையில் வரும் மஹாப்பிரதோஷம்

திருமூல நாயனார் குருபூஜை (07.11.22)

நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூஜை (08.11.22)

ஐப்பசி பௌர்ணமி :அன்னாபிஷேகம் (08.11.22)

சிவலிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இடங்கழி நாயனார் குருபூஜை (09.11.22)

கிருத்திகை (09.11.22)

சங்கடஹர சதுர்த்தசி (11.11.22)

ஐப்பசி கடைசி நாள் (16.11.22)

ஐப்பசி மாத கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.

17.11.2022 - கார்த்திகை 1, முடவன் முழுக்கு, இன்று காவிரி ஆற்றில் நீராடினாலும் அதே பலன் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top