சிவபெருமானின் அற்புத வடிவங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபெருமானின் அற்புத வடிவங்கள் பற்றிய பதிவுகள் :

பொதுவாக ஆலயங்களில் வழிபடப்படும் வடிவங்கள் சிவமூர்த்தம், லிங்க மூர்த்தம் என இரு வகையாக அழைக்கப்படுகிறது. லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. படைத்தல் உட்பட ஐந்து தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது ஆகும். எனவே, லிங்க வடிவம் என்பது பரம்பொருளுக்கு உரிய அடையாளம்.

லிங்கத்துக்கு மூன்று பகுதிகள் :

அடிப்பகுதி - பிரம்ம பாகம். நடுப்பகுதி - ஆவுடை என்ற பீடத்துள் அமைந்துள்ள விஷ்ணு பாகம். மேற்பகுதியில் உள்ள பாணம் - ருத்ர பாகம் என்பனவாகும். 

பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம், பூமிக்குள் மறைந்து நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுவின் பாகம் அபிஷேக நீரைத் தாங்கி நிற்கும். நெருப்புக்கு அதிபதியான சிவ பாகம், மேலோங்கி ஜோதி போல் ஒளியுடன் இருக்கும். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும்.

லிங்கத்தின் வகைகள் :

லிங்கத்தில் பல வகைகள் உண்டு. அவை,

1. இஷ்ட லிங்கம்.
2. பரார்த்த லிங்கம்.
3. சுயம்பு லிங்கம்.
4. திவ்ய லிங்கம்.
5. மானுட லிங்கம்.
6. முக லிங்கம்.

1. இஷ்ட லிங்கம் :

குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறுவது இஷ்ட லிங்கம். இதை ஆன்மார்த்த லிங்கம் என்று அழைப்பார்கள்.

2. பரார்த்த லிங்கம் :

உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காக தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்களால் விதிப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பரார்த்த லிங்கம். 

3. சுயம்பு லிங்கம் :

தானாய் தோன்றிய லிங்கம். கரடுமுரடாக உள்ளதுவும், எந்த வித ரேகையும் இல்லாமலும் விளங்குவது சுயம்பு லிங்கம். மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூர் தலத்து இறைவனின் திருநாமம் தான்தோன்றியப்பர். இவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.

4. திவ்ய லிங்கம் :

தேவர்கள் அர்ச்சனை செய்து பூஜை செய்யும் லிங்கம், திவ்ய லிங்கம் எனப்படும். உதாரணமாக வாயுதேவன் பூஜித்தது  வாயு லிங்கம் எனவும், வருணன் பூஜித்தது வருண லிங்கம் எனவும், குபேரன் பூஜித்தது குபேர லிங்கம் எனவும் அழைக்கப்படுகிறது.

5. மானுட லிங்கம் :

மனிதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம் மானுட லிங்கம் எனப்படும். உதாரணமாக மனிதனாக அவதரித்த ராமபிரான் ராமேஸ்வரத்தில் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம்.

முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆர்ஷக லிங்கம். அசுரர்களால் பூஜிக்கப்பட்டது இராட்சத லிங்கம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, கோதாவரி ஆகிய நதிகளிலும், நேபாளம், கேதாரம் போன்ற இடங்களிலும் காணப்படுவது பாண லிங்கங்கள். 

6. முக லிங்கம் : 

முக லிங்கம் என்பது ஒன்று முதல் ஐந்து முகங்கள் வரை கொண்டது. 

கிழக்கு முகம் - தத்புருஷம் - பொன் நிறம் உடையது. 

தெற்கு முகம் - அகோரம் - கறுப்பு நிறம். 

மேற்கு முகம் - சத்யோஜாதம் - வெண்மை நிறம். 

வடக்கு முகம் - வாமதேவம் - சிவப்பு நிறம். 

வடகிழக்கு - ரூடவ்சான முகம் - பளிங்கு நிறம். 

இந்த முக லிங்கங்களை வழிபட்டால், உலகில் வாழும் காலத்தில் இம்மையில் எல்லா விதச் செல்வங்கள் மற்றும் சுக போகங்களும், மறுமையில் சிவ லோக பதவியும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்படுகிறது.

ரூடவ்சனுக்கும் பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றுள்ள வடிவம், சோம கணபதி மூர்த்தம் என்று வழங்கப்படுகிறது. பாசுபசு அஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த அர்ஜூனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ரூடவ்சனை கிராம மூர்த்தி என்பர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top