புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும். 

செல்வத்தை காட்டும் தங்க மலர்களை விட பக்தியோடு மண் மலர்களை சூடி வழிபட்டாலும் அதனை பக்தியோடு ஏற்றுக்கொண்டு அந்த பக்தருக்கு முக்தியை கொடுத்தவர் பெருமாள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். 

தூய்மையான பக்தியோடு பெருமாளை, திருப்பதி ஏழுமலையானை வணங்கினால் வைகுண்ட பிராப்தியை அளிப்பார். 

திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். 

வீட்டில் திருமலை வெங்கடேசப் பெருமாளின் உருவ படத்தை வைத்து மாலை அணிவித்து வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்யலாம்.

சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

பல கோடி சொத்துக்களின் அதிபதியாக இருக்கும் ஏழுமலையானுக்கு தினந்தோறும் கோடி கோடியாக உண்டியல் காணிக்கை சேருகிறது என்றாலும் அவருக்கு படையல் மண்பானையில் வைக்கப்படும் தயிர்சாதம் தான். 

மன்னன் கொடுத்த தங்கப் பூ மாலையை விட மண்ணால் குயவர் செய்த மாலையை அன்போடு ஏற்றுக்கொண்டவர் திருப்பதி ஏழுமலையான்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் பெருமாளுக்கு சிலர் பலவகை உணவுகளை படைத்து வழிபாடுவார்கள். 

சர்க்கரைப் பொங்கல், புளி சாதல், மிளகு சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், எள்ளு சாதம், கொண்டைக்கடலை சுண்டல், உளுந்த வடை, மிளகு வடை செய்வார்கள். சனிக்கிழமை தாளிகை என்று சொல்வார்கள். 

இந்த படையலுக்கு செய்யும் உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்க மாட்டார்கள். 

பெருமாளுக்கு தூய பச்சரிசி மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top