கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாத சிறப்புக்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கஷ்டங்கள் தீர்க்கும் கார்த்திகை மாத சிறப்புக்கள் பற்றிய பதிவுகள் :

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, துளசி கல்யாணம், ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

மற்ற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு. பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே மழைக்காலம் என்பார்கள். ஆனால் இந்த கார்த்திகை மாதத்தில் தான் மழை, வெயில், பனி ஆகிய அனைத்தும் கலந்த காலநிலை நிலவும். இது சீதோஷண ரீதியாக மட்டுமல்ல ஆன்மிக ரீதியாகவும் அனைத்து தெய்வங்களின் வழிபாட்டிற்கும் உரிய மாதமாகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் சோவார விரதம் இருப்பது சிவ பெருமானின் அருளை முழுவதுமாக பெற்றுத் தரும். கார்த்திகை மாதத்தில் தான் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். இந்த சங்காபிஷேகத்திற்கும், மற்ற அபிஷேகங்களுக்கும் உரிய பொருட்களை வாங்கிக் கொடுத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் நமக்கு கிடைக்கும். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் ஆன முருகப் பெருமானையும், ஹரிஹர சுதனான ஐயப்பனையும் மாலை அணிந்து, விரதமிருந்து வழிபடலாம்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, துளசி கல்யாணம், ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய தீபம் பரணி தீபம் ஏற்றப்படும். இதை யம தீபம் என்றும் சொல்வார்கள். வாழ்க்கை மட்டும் அல்ல சுகமான மரணம் ஏற்பட்டு, யம யோக துன்பமின்றி இறைவனின் திருவடிகளை அடைவதற்காகவும், நமது முன்னோர்களும் யம துன்பங்களில் இருந்து விடுபட்டு, இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பதற்காகவும் ஏற்றப்படுவது தான் இந்த பரணி தீபம்.

இதே போல் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை மாத ஞாயிற்றுகிழமைகளில் உமா மகேஸ்வர விரதம் இருந்தால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் வடிவமே, ‘உமா மகேஸ்வரர்’ வடிவம். சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. இந்த வடிவத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் நினைத்து இருக்கும் விரதத்திற்கு ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று பெயர்.

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதம் முழுவதும் காலையிலும், மாலையிலும் வீட்டு நிலை வாசலுக்கு முன்பு விளக்கேற்றுவது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும். கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top