மாத சிவராத்திரி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாத சிவராத்திரி விரதம் பற்றிய பதிவுகள் :

சிவ பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது சிவராத்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மஹா சிவராத்திரி என்கிறோம். 

வருடத்திற்கு 12 சிவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் 6 சிவராத்திரிகள் தேய்பிறையிலும், 6 சிவ ராத்திரிகள் வளர்பிறையும் வருகின்றன.

1. நித்திய சிவராத்திரி, 
2. மாத சிவராத்திரி, 
3. பட்ச சிவராத்திரி, 
4. யோக சிவராத்திரி, 
5. மஹா சிவராத்திரி 

என சிவராத்திரி விரதம் ஐந்து வகைகளில் உள்ளதாகவும், மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.
 
மஹா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விரதம் இருக்கும் முறை :

விரதம் கடைபிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவ ராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். 

சித்திரை மாதம் - உமாதேவியால் வழிபடப்பட்டது.

வைகாசி மாதம் - சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

ஆனி மாதம் - ஈசனால் வழிபடப்பட்டது.

ஆடி மாதம் - முருகனால் வழிபடப்பட்டது.

ஆவணி மாதம் - சந்திரனால் வழிபடப்பட்டது.

புரட்டாசி மாதம் - ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

ஐப்பசி மாதம் - இந்திரனால் வழிபடப்பட்டது.

கார்த்திகை மாதம் - சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

மார்கழி மாதம் - லட்சுமியால் வழிபடப்பட்டது.

தை மாதம் - நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

மாசி மாதம் - தேவர்களால் வழிபடப்பட்டது.

பங்குனி மாதம் - குபேரனால் வழிபடப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top