ஆணவம் அழிக்கும் செவ்வந்தியின் மகிமைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆணவம் அழிக்கும் செவ்வந்தியின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :

மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும், மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்து செல்லக்கூடியவை.

அதனால் தான் இறைவனை துதிக்கின்ற பூஜைகள், வழிபாடுகளில் மலருக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் எல்லா விதமான மலர்களையும் எல்லா தெய்வத்திற்கும், வழிபாடுகளிலும் பயன்படுத்தலாமா? என்றால் அவ்வாறு செய்ய இயலாது. குறிப்பிட்ட மலர்களை குறிப்பிட்ட கடவுளுக்குத்தான் அர்பணிக்க முடியும்.

உதாரணத்திற்கு துளசியை சிவனுக்கு அர்பணிக்க முடியாது. ஆனால் விஷ்ணுப்பெருமானுக்கு மாலையாக கட்டி வழிபடலாம். ஒரு வில்வ தளமானது லட்சம் பொன் மலர்களுக்கு சமம். 

ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்பட்ட பாவங்களும் விலகும்.

அந்த வகையில், கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது செவ்வந்தி மலர் ஆகும்.

 ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பது நம்பிக்கை.

அதை போலவே செவ்வந்தியின் தனித்தன்மை யாதெனில், மற்ற மலர்களை போல் அல்லாமல் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே அதனால் மற்ற மலர்களை மரு உருவாக்கம் செய்ய முடியும். இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது.

 செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற் போல மற்றொரு வடிவை எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

இந்த செவ்வந்தி மலர் அனைத்து விதமான தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும்.

மேலும் இதனுடைய நறுமணமானது அதன் இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அதாவது தான் வருந்தினும் பிறருக்கு நன்மையை அளிக்கும் புனித தன்மையுடன் செவ்வந்தி உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top