திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பற்றிய பதிவுகள் :

டிசம்பர் 6, 2022 அன்று திருவண்ணாமலையில் கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. 3-ம் நாள் இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் முருகரும், சிம்ம வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத் தொடர்ந்து 4-ம் நாளான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகர், பல்லக்கு வாகனத்திலும் சந்திரசேகரர், நாக வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னே நாக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி கற்பக விருட்சம், காமதேனு வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மஹா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மஹா தீபத்திற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய், கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top