லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யமும் நிரம்பி வழியும் மார்கழி மாத வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யமும் நிரம்பி வழியும் மார்கழி மாத வழிபாடு பற்றிய பதிவுகள்:

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் சந்தோஷமாக வாழவேண்டும் அவர்கள் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காகத்தான் அவர்கள் வாரம் தோறும் பூஜை செய்கின்றனர் மற்றும் பல கோவில்களுக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு உலகத்திலேயே மிகவும் முக்கியமான செயல் என்றால் தனது குடும்பத்தை நினைத்து இறைவனிடம் பூஜை செய்வது ஒன்றுதான். இப்படிப்பட்ட பெண்கள் மார்கழி மாதத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தையும் லட்சுமி கடாட்சத்தையும் கொண்டு வர முடியும். 

இவை மட்டும் உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடி கொண்டு விட்டால், நீங்கள் நினைத்தபடி உங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் வளமான வாழ்வை வாழமுடியும்.

மார்கழி மாதம் என்றாலே இறைவனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் இறைவனுக்கான பூஜைகள் பல செய்யப்படுகின்றன. தெய்வீக மணம் கமழும் மாதமாக மார்கழி மாதம் பார்க்கப்படுகிறது. எப்பொழுதையும் விட அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதத்தில் விடியற் காலையிலேயே பஜனைகள் தொடங்கிவிடும்.

இந்த மாதம் ஏகாதசி விரதம், திருவாதிரை விரதம் போன்ற விரதங்களை மேற்கொள்ள, இவற்றின் மூலம் சொர்க்கத்தை அடையலாம் எனவும் சொல்லப்படும். இப்படிப்பட்ட விசேஷ மாதத்தில் குடும்பத்திற்கு ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் கொண்டுவரக்கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கிறது. நமது முன்னோர்கள் அனைவரும் மார்கழி மாதத்தில் காலை எழுந்து குளித்து விட்டு வாசலில் சாணி மொழுகி அரிசி மாவு கோலமிட்டு நடுவில் சாணியில் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் ஒரு பூசணி மலரை வைத்து விடுவார்கள்.

இவ்வாறு இவர்கள் செய்வது அலங்காரத்திற்கு மட்டுமல்ல இவற்றில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கின்றன. மார்கழி மாதத்தில் காலையில் தேவர்களும் அஷ்ட தேவதைகளும் தெருவில் உலா வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் நோட்டமிட்டு வருவார்கள். எந்த வீடு அழகாக மங்களகரமாக கோலமிட்டு அவர்களை வரவேற்கும் வகையில் இருக்கிறதோ அந்த வீட்டிற்குள் எதைப்பற்றியும் யோசிக்காமல் நுழைந்து விடுவார்கள்.

இவர்கள் வீட்டிற்குள் நுழைவதன் மூலம் ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் நமது வீடு முழுவதுமாக நிரம்பி விடும். எனவே இந்த மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து விட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதற்காக இரண்டு மண் அகல் விளக்கு மற்றும் ஒரு ஆத்ம விளக்கு இவை இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, முதலில் இரண்டு மண் அகல் விளக்குகளை வாசலில் வைத்து விட வேண்டும். பிறகு ஒரு ஆத்ம விளக்கை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பின்னர் கண்களை மூடி, இறைவனை வேண்டி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் மார்கழி மாதத்தில் தொடர்ந்து செய்து வந்தால் அஷ்ட தேவதைகளும் நமது வீட்டில் குடி கொண்டு விடுவார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top