ஸ்ரீமஹா கால பைரவர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீமஹா கால பைரவர் பற்றிய பதிவுகள் :

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். காலம், தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே கால பைரவ மூர்த்தியாவார்.


கால பைரவர் வழிபாடு :


பைரவரை பிரார்த்தனை செய்து, உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும், வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ பைரவருக்கு விளக்கு போட கூடாது.

தை மாதம், பைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதமாகும். தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு தரும்.

பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி. பொதுவாக, மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்லகாரியமும் செய்ய மாட்டார்கள். அதற்கு காரணம் அஷ்டமி அன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால், அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே, அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பித்ரு தோஷம், சனிதோஷம் நீங்க பைரவர் வழிபாடு மிகவும் சிறந்தது.


பலன்கள் :


தலை குனியா வாழ்க்கை.

சுப மங்களம் ஊர்ஜிதம்.

தீய வினைகள் முற்றிலும் அழிவு.

பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.

தடையில்லாமல் சௌகரியம் ஏற்படுதல்.

கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.

கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.

வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.

இறைவனை எளிதாக உணர்தல்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top