இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க அருள் புரியும் கள்ள விநாயகர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க அருள் புரியும் கள்ள விநாயகர் பற்றிய பதிவுகள் :

கள்ள விநாயகர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை. ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார். அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது. 

அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது. இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார். சமஸ்கிருதத்தில் இவரை சோர கணபதி என்று அழைக்கிறார்கள்.  

அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் விநாயகரை வணங்கிப் பாடியது திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம். பத்து பாடல்கள் கொண்ட இப்பதிகத்தில் கள்ள விநாயகர் திருவுருவ அழகு, வழிபடும் முறை மற்றும் சிறப்பினைக் கூறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top